இங்கிலாந்துக்குப் பின்னடைவு

இங்கிலாந்துக்குப் பின்னடைவு

1 mins read
24b882d4-aae8-4920-b3a5-60588d5422d6
வெற்றியைக் கொண்டாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் மார்னஸ் லபூஷன்யே (இடது), மார்க்கஸ் ஹேரிஸ். ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை அபாரமான முறையில் வென்றது ஆஸ்திரேலியா. படம்: இபிஏ -

பிரிஸ்­பன்: கிரிக்­கெட்­டில் இப்­பருவத்­தின் ஆஷஸ் தொட­ரின் முதல் டெஸ்ட் ஆட்­டத்­தில் இங்­கி­லாந்தை ஒன்­பது விக்­கெட்­டு­கள் வித்­தி­யா­சத்­தில் விழ்த்­தி­யுள்­ளது ஆஸ்திரேலியா. மூன்­றாம் நாள் ஆட்­டத்­தில் மீண்­டு­வ­ரும் அறி­குறி­க­ளைக் காட்­டிய இங்­கி­லாந்து, நான்­காம் நாளன்று தனது இரண்­டா­வது இன்­னிங்­ஸில் 77 ஓட்­டங்­களில் கடைசி எட்டு விக்­கெட்­டு­களை இழந்­தது.

இங்­கி­லாந்­தின் அணித் தலை­வர் ஜோ ரூட், வெளி­யேற்­றப்­பட்­ட­போது 89 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தார், டேவிட் மலான், 82 ஓட்­டங்­களை எடுத்த பிறகு வெளி­யேற்­றப்­பட்­டார். 297 ஓட்­டங்­களுக்கு இங்­கி­லாந்து தனது அனைத்து விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்­தது. முதல் இன்­னிங்­ஸில் 147 ஓட்­டங்­களை இங்கிலாந்து எடுத்­தது.

இத­னால் தனது முதல் இன்­னிங்­ஸில் 425 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்த ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு ஆட்­டத்தை வெல்ல 21 ஓட்­டங்­கள் மட்­டுமே தேவைப்­பட்­டன. மதிய உணவு ஓய்­வுக்­குப் பிறகு இலக்கை எளி­தில் அடைந்­தது ஆஸ்­தி­ரே­லியா.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இதற்கு முன் ஆடிய 11 டெஸ்ட் ஆட்­டங்­களில் 10ல் தோல்­வி­ய­டைந்­தது இங்­கி­லாந்து. ஆஷஸ் கிண்­ணத்தை மீண்­டும் வெல்ல இங்­கி­லாந்து இத்­தொ­டரை வெல்­ல­வேண்­டும், எஞ்­சி­யுள்ள நான்கு ஆட்­டங்­களில் கவனமாக இருக்கவேண்டும்.

இவ்­வாட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் புதிய அணித் தலை­வரான பேட் கம்­மின்ஸ் ஏழு விக்­கெட்­டு­களை வெளி­யேற்றி அசத்­தி­னார். நான்கு விக்­கெட்­டு­களை வெளி­யேற்­றி­னார் நேத்­தன் லியோன்.