டி20 கிரிக்கெட்: சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்

டி20 கிரிக்கெட்: சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்

1 mins read
750dceb2-1e79-47d0-8b8f-8aa6c205403c
-

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ரிஸ்வான் (படம்) ஒரே ஆண்டில் டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மூன்று ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 18.5 ஓவரில் 208 இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.