யோஷிடாவுக்குப் பிரியாவிடை

யோஷிடாவுக்குப் பிரியாவிடை

2 mins read
5ee2c010-bb46-4109-b750-2cab581ab89c
சுசுகி கிண்ணத்தில் சிறப்பாகச் செயல்பட்ட சிங்கப்பூர் குழுவுக்கு அமைச்சர் எட்வின் டோங் (நடுவில்) புகழாரம் சூட்டினார். அவர் வழங்கிய பரிசை டட்சுமா யோஷிடாவும் (இடது) அணித் தலைவர் ஹாரிஸ் ஹருணும் பெற்றுக்கொண்டனர்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர்: சிங்­கப்­பூர் காற்­பந்­துக் குழு­வின் தலை­மைப் பயிற்­று­விப்­பா­ளர் டட்­சுமா யோஷிடா பதவி வில­கி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கத்­து­டன் அவர் செய்­து­கொண்ட ஒப்­பந்­தம் இன்­னும் முடி­யாத நிலை­யில் அவர் விடை­பெற்­று­கொண்­டார்.

அவ­ரது ஒப்­பந்­தம் அடுத்த ஆண்டு டிசம்­பர் மாதம் நிறை­வ­டை­கிறது.

அண்­மை­யில், சுசுகி கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யில் அபா­ரத் திற­னை­யும் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் போரா­டும் உணர்­வை­யும் வெளிப்­ப­டுத்­திய சிங்­கப்­பூர் குழு­வின் முயற்­சி­களை அங்­கீ­க­ரித்­துப் பாராட்­டும் வகை­யில் நேற்று ஜாலான் புசார் விளை­யாட்­ட­ரங்­கத்­தில் விருந்­து­ப­ச­ரிப்பு நடை­பெற்­றது.

அதில் கலந்­து­கொண்டு பேசிய கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் யோஷி­டா­வின் பதவி வில­கல் குறித்து அறி­வித்­தார்.

2012ஆம் ஆண்­டுக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக சிங்­கப்­பூர் குழு, சுசுகி கிண்­ணப் போட்­டி­யின் அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

ஆனால் சர்ச்­சைக்­கு­ரிய வகை­யில் தோல்­வி­யின் பிடி­யில் சிக்கி இறு­திச் சுற்­றுக்­குத் தகுதி பெறும் வாய்ப்பை அது இழந்­தது. அரை­யி­றுதி ஆட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் மூன்று ஆட்­டக்­கா­ரர்­க­ளுக்­குச் சிவப்பு அட்டை காட்­டப்­பட்­டது. நடு­வர் எடுத்த பல வியக்­கத்­தக்க முடி­வு­க­ளால் 4-2 எனும் கோல் கணக்­கில் இந்­தோ­னீ­சி­யா­வி­டம் சிங்­கப்­பூர் தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்விக்குப் பிறகு சொந்த நாடான ஜப்பானில் உள்ள பல குழுக்களும் ஆசிய நாடு ஒன்றும் தமக்குப் பயிற்றுவிப்பாளர் பதவி வழங்க தயாராக இருப்பதாக யோஷிடா தெரிவித்திருந்தார்.

47 வயது நிரம்பிய யோஷிடா, 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப்பாளராகப் பதவி ஏற்றார்.

அவரது வழிகாட்டலின்கீழ் சிங்கப்பூர் குழு ஆறு வெற்றிகள், நான்கு சமநிலைகள், பத்து தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.