ஆஸ்திரேலியாவிடம் சுருண்ட இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவிடம் சுருண்ட இங்கிலாந்து

2 mins read

மெல்­பர்ன்: ஆஷஸ் கிரிக்­கெட் போட்­டி­யில் இங்­கி­லாந்தை ஆஸ்­தி­ரே­லிய அணி வீழ்த்­தி­யுள்­ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் சுற்­றுப்­

ப­ய­ணம் மேற்­கொண்­டுள்ள ஜோ ரூட் தலை­மை­யி­லான இங்­கி­லாந்து கிரிக்­கெட் அணி ஐந்து போட்­டி­கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொட­ரில் விளை­யா­டு­கிறது.

இந்­நி­லை­யில், இங்­கி­லாந்து-ஆஸ்­தி­ரே­லியா அணி­கள் இடை­யி­லான மூன்­றா­வது டெஸ்ட் போட்டி யான 'பாக்­சிங் டே' டெஸ்ட் கிரிக்­கெட் போட்டி மெல்­பர்­னில் நடை­பெற்­றது. முத­லில் பந்தடித்த இங்­கி­லாந்து அணி 185 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. ஜோ ரூட் 50 ஓட்டங்கள் எடுத்­தார்.

ஆஸ்­தி­ரே­லியாவின் கம்­மின்ஸ், நேதன் லயன் தலா மூன்று விக்­கெட்­டு­களைக் கைப்­பற்­றி­னர்.

தொடர்ந்து முதல் இன்­னிங்சை ஆடிய ஆஸ்­தி­ரே­லியா, 267 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்­கி­லாந்து அணியைவிட 82 ஓட்டங்கள் எடுத்து ஆஸ்திரேலியா முன்­னிலை வகித்தது. தொடக்க வீரர் ஹாரிஸ் பொறுப்­பு­டன் விளை­யாடி அரை சதம் கடந்து 76 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.­

இங்கிலாந்தின் ஆண்­டர்­சன் நான்கு விக்­கெட்டுகளும், ராபின்­சன், மார்க் வுட் தலா 2 விக்­கெட்டு களும், ஸ்டோக்ஸ், ஜேக் லீச் தலா ஒரு விக்­கெட்­டும் சாய்த்தனர்.

இதை­ய­டுத்து, 82 ஓட்டங்கள் பின்தங்­கிய நிலை­யில் இங்­கி­லாந்து அணி இரண்­டா­வது இன்­னிங்சைத் தொடர்ந்­தது. ஆஸ்­தி­ரே­லிய அணி­யி­ன­ரின் பந்துவீச்­சில் இங்­கி­லாந்து திக்குமுக்காடியது.

இரண்­டாம் நாள் முடி­வில் இங்­கி­லாந்து நான்கு விக்­கெட்­டு­களை இழந்து 31 ஓட்டங்கள் எடுத்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், மூன்­றாம் நாள் ஆட்­டம் நேற்று நடை­பெற்­றது. இந்த ஆட்டத்திலும் ஆஸ்­தி­ரே­லிய பந்துவீச்சாளர்கள் சக்கைபோடு போட்டனர்.

இத­னால் இங்­கி­லாந்­தின் விக்­கெட்­டு­கள் அடுத்தடுத்து மள­ம­ள­வென சரிந்­தன.

இறு­தி­யில், இங்­கி­லாந்து இரண்­டா­வது இன்­னிங்­சில் 68 ஓட்டங்கள் எடுத்து சுருண்­டது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மட்­டுமே இரட்டை இலக்கை எட்டினர். மற்­ற­வர்­கள் ஒற்றை இலக்­கில் நடையைக் கட்டினர்.

இதன்­மூ­லம் ஆஸ்­தி­ரே­லியா ஓர் இன்­னிங்ஸ் மற்­றும் 14 ஓட்டங்­கள் வித்­தி­யா­சத்­தில் அபார வெற்றி பெற்­ற­து­டன், ஆஷஸ் தொட­ரை 3-0 என கைப்­பற்றியது.

ஆஸ்­தி­ரே­லியா சார்­பில் ஸ்காட் போலண்ட் நான்கு ஓவர்கள் வீசி, வெறும் ஏழு ஓட்டங்­கள் கொடுத்து, ஆறு விக்­கெட்டுகள் கைப்பற்றி ஆட்ட நாய­கன் விருது பெற்­றார்.