நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் நியூகாசல் குழுவும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.
நியூகாசலின் எலன் செயிண்ட் மெக்சிமின் கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
பிற்பாதியில் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய எடின்சன் கவானி யுனைடெட்டுக்காக கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.
ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் இரு குழுக்களுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.
இதன்மூலம் யுனைடெட்
பட்டியலில் ஏழாவது இடத்தில் தொடர்ந்து இருக்கிறது.
இதற்கு முன்பு மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவிய நியூகாசல், யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு புள்ளியைப் பெற்றுள்ள
போதிலும் அடுத்த பருவத்தில் இரண்டாம் நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்குகிறது.
மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பினால்தான் அடுத்த பருவத்திலும் அது இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் தொடர்ந்து இடம்பெற முடியும்.

