கங்குலிக்கு கொவிட்-19

கங்குலிக்கு கொவிட்-19

1 mins read

கோல்­கத்தா: இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரி­யத் தலை­வர் சவு­ரவ் கங்­கு­லிக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இந்­திய அணி­யின் முன்­னாள் தலை­வ­ரான கங்­கு­லிக்­குக்

காய்ச்­சல் ஏற்­பட்­டதை அடுத்து, அவ­ருக்கு கொவிட்-19 பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது.

அவ­ருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து அவர் மருத்­துவ

மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

அவ­ரது உடல்­நிலை சீராக உள்­ளது என்று இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரி­யம் தெரி­வித்­துள்­ளது. கங்­குலி முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. சில நாள்க­ளுக்கு முன்பு

நெஞ்­சு­வலி ஏற்­பட்­டதை அடுத்து, அவர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­

ம­திக்­கப்­பட்­டார். அப்­போது அவ­ருக்கு ஆஞ்­சியோ சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. கடந்த ஆண்டு கங்­குலி குடும்­பத்­தி­னர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டைந்­த­னர்.