அரையிறுதியில் இந்தியா

அரையிறுதியில் இந்தியா

1 mins read

துபாய்: ஜூனி­யர் ஆசி­யக் கிண்ண கிரிக்­கெட் போட்­டி­கள் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­களில் நடை­பெற்று வரு­கிறது. இதில் நேற்று முன்­தி­னம் நடந்த போட்­டி­யில் இந்­தியா-ஆப்­கா­னிஸ்­தான் அணி­கள் மோதின.

முத­லில் பந்­த­டித்த ஆப்­கா­னிஸ்­தான் அணி நான்கு விக்­கெட்­டு­கள் எடுத்து 259 ஓட்­டங்­கள் எடுத்­தது. அந்த அணி­யின் இஜாஸ் அக­மது 86 ஓட்­டங்­கள் குவித்து ஆட்­ட­மி­ழக்­கா­மல் இருந்­தார். சுலை­மான் சபி 73 ஓட்­டங்­கள் எடுத்து ஆட்­ட­மி­ழந்­தார்.

இந்­தியா சார்­பில் ராஜ்­வர்­தன், கௌஷல் தாம்பே, விக்கி மற்­றும் ராஜ் பாவா ஆகி­யோர் தலா ஒரு விக்­கெட் வீழ்த்­தி­னர்.

இதை­ய­டுத்து, 260 ஓட்­டங்­கள் எடுத்­தால் வெற்றி என்ற இலக்­கு­டன் இந்­தியா கள­மி­றங்­கி­யது. ராஜ் பாவா, கௌஷல் தாம்பே ஜோடி நிதா­ன­மாக ஆடி அணியை வெற்­றிப்­ பா­தைக்கு அழைத்­துச் சென்­ற­னர். இந்­தியா 262 ஓட்­டங்­கள் எடுத்து நான்கு விக்­கெட்­டு­கள் வித்­தி­யா­சத்­தில் வென்றது.