'போட்டி இன்னும் முடியவில்லை'

'போட்டி இன்னும் முடியவில்லை'

2 mins read
9e05c9a4-86f8-424a-bb09-3d19ae8655f8
கோலடித்த மகிழ்ச்சியை சக வீரர் லப்போர்ட்டேவுடன் பகிர்ந்துகொள்ளும் மேன்சிட்டி ஆட்டக்காரர் ஃபில் ஃபோடன். படம்: ராய்ட்டர்ஸ் -

இபிஎல் காற்பந்து: எட்டுப் புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் மான்செஸ்டர் சிட்டி

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்­தில் உள்ள செல்சி குழு­வை­விட எட்­டுப் புள்­ளி­கள் கூடு­த­லா­கப் பெற்று முத­லி­டத்தை வலு­வாக்­கிக்­கொண்­டுள்­ளது மான்­செஸ்­டர் சிட்டி குழு.

பிரன்ட்­ஃபர்ட் குழு­வு­டன் நேற்று அதி­காலை மோதிய ஆட்­டத்தின் முற்­பா­தி­யில் ஃபில் ஃபோடன் கோல­டிக்க, 1-0 என்ற கணக்­கில் சிட்டி வெற்­றி­பெற்­றது.

முன்­ன­தாக செல்சி-பிரைட்­டன் குழுக்­கள் மோதிய ஆட்­டம் 1-1 எனச் சம­நி­லை­யில் முடிந்­த­தும் லெஸ்­டர் குழு­வி­டம் 1-0 என லிவர்­பூல் தோற்­றுப்­போ­ன­தும் சிட்­டிக்­குச் சாத­க­மாக அமைந்­தன.

இருப்­பி­னும், பட்­டத்­திற்­கான போட்டி இன்­னும் முடி­ய­வில்லை என்­கி­றார் சிட்டி குழு­வின் நிர்­வாகி பெப் கார்­டி­யோலா.

"இன்­னும் 54 புள்­ளி­க­ளுக்கு விளை­யாட வேண்­டி­யுள்­ளது," என்று அவர் சுட்­டி­னார்.

"பட்­டம் சிட்­டி­யின் கைசேர்­வது உறுதி என்று சொல்­வ­தைக் கேட்க நன்­றா­கவே உள்­ளது. ஆனால், செல்­சி­யும் லிவர்­பூ­லும் அற்­பு­த­மாக விளை­யாடி வரு­கின்­றன. புள்ளி வித்­தி­யா­சம் அதி­க­மாக இருப்­ப­தற்கு அந்­தக் குழுக்­கள் தோற்­றது கார­ண­மல்ல. தொடர்ச்­சி­யாக நாங்­கள் பத்து ஆட்­டங்­களில் வென்று இருப்­பதே கார­ணம்," என்­றார் கார்­டி­யோலா.

முட்­டாள்­த­னம்: செல்சி நிர்­வாகி

இத­னி­டையே, சாம்­பி­யன்ஸ் லீக் நடப்பு வெற்­றி­யா­ள­ரான செல்சி, இப்­ப­ரு­வத்­திற்­கான இபி­எல் பட்­டப் போட்­டி­யில் இன்­னும் இருப்­ப­தா­கத் தாம் நினைத்­தால் அது முட்­டாள்­த­ன­மா­னது என்று அக்­கு­ழு­வின் நிர்­வாகி தாமஸ் டகல் கூறி­யி­ருக்­கி­றார்.

பிரைட்­ட­னுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் கடைசி நேரத்­தில் கோலை விட்­டுக்­கொ­டுத்­த­தால் செல்சி வெற்­றி­யைப் பறி­கொ­டுத்து, இரண்டு புள்­ளி­களை இழந்­தது.

"செல்சி ஆட்­டக்­கா­ரர்­கள் எழு­வர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஐந்து, ஆறு வீரர்­கள் ஆறு வாரங்­க­ளுக்­கும் மேலாக விளை­யாட முடி­ய­வில்லை. இத்­த­கைய சூழ­லில், எங்­க­ளால் எப்­ப­டிப் பட்­டத்­திற்­குப் போட்டி போட முடி­யும்," என்று சொல்லி டகல் ஆதங்­கப்­பட்­டார்.