கிரிக்கெட்: இந்திய வேகத்தில் சரிந்த தென்னாப்பிரிக்க அணி

கிரிக்கெட்: இந்திய வேகத்தில் சரிந்த தென்னாப்பிரிக்க அணி

2 mins read

செஞ்­சு­ரி­யன்: தென்­னாப்­பி­ரிக்கா சென்­றுள்ள விராத் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்­கெட் அணி, தனது சுற்­றுப்­ப­ய­ணத்தை வெற்­றி­யு­டன் தொடங்­கி­ இருக்கிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடை­யிலான முதல் டெஸ்ட் போட்­டி­யில் இந்­திய அணி 113 ஓட்ட வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற்­றது. இத­னை­ய­டுத்து, மூன்று போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொட­ரில் இந்­திய அணி 1-0 என முன்­னிலை பெற்­றுள்­ளது.

செஞ்­சு­ரி­யன் அரங்­கில் இந்­திய அணி வெற்­றி­பெற்­றது இதுவே முதன்­முறை. இந்த வெற்­றிக்கு இந்­திய அணி­யின் வேகப் பந்­து­வீச்­சா­ளர்­கள் முக்­கி­யக் கார­ண­மாக அமைந்­த­னர்.

போட்­டி­யின் முதல் இன்­னிங்­சில் லோகேஷ் ராகுல் 123 ஓட்­டங்­களை விளாச, இந்­திய அணி 324 ஓட்­டங்­களை எடுத்­தது. அதன்­பின் பந்­த­டித்த தென்­னாப்­பி­ரிக்க அணி முதல் இன்­னிங்­சில் 197 ஓட்­டங்­களுக்­குச் சுருண்­டது.

இந்­திய அணித் தரப்­பில் வேகப் பந்துவீச்சாளர் முகம்­மது ஷமி ஐந்து விக்­கெட்­டு­க­ளைக் கைப்­பற்­றி­னார். அத­னு­டன், டெஸ்ட் போட்­டி­களில் 200 விக்­கெட் வீழ்த்தி­யோர் பட்­டி­ய­லி­லும் அவர் இணைந்­தார்.

127 ஓட்­டங்­கள் முன்­னி­லை­யுடன் இரண்­டா­வது இன்­னிங்­சைத் தொடங்­கிய இந்­திய அணி 174 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது.

இத­னைத் தொடர்ந்து, 305 ஓட்­டங்­கள் என்ற வெற்றி இலக்­கு­டன் இரண்­டா­வது இன்­னிங்சை ஆடத் தொடங்­கிய தென்­னாப்­பி­ரிக்க அணி, நான்­காம் நாள் முடி­வில் நான்கு விக்­கெட் இழப்­பிற்கு 94 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், போட்­டி­யின் கடைசி நாளான நேற்று அவ்­வணி 97 ஓட்­டங்­க­ளைச் சேர்த்து, எஞ்சி­ இருந்த ஆறு விக்­கெட்­டு­க­ளை­யும் பறி­கொ­டுத்­துத் தோற்­றுப்­போனது.

பும்ரா, ஷமி ஆளுக்கு மூன்று விக்­கெட்­டு­க­ளை­யும் சிராஜ், அஸ்­வின் ஆளுக்கு இரண்டு விக்­கெட்டு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

ராகுல் ஆட்ட நாய­க­னாக அறி­விக்­கப்­பட்­டார்.

இரண்­டா­வது போட்டி அடுத்த மாதம் 3ஆம் தேதி ஜோக­னஸ்­பர்க்­கில் தொடங்­கு­கிறது.