ரொனால்டோவிற்கு இந்தியாவில் சிலை

ரொனால்டோவிற்கு இந்தியாவில் சிலை

1 mins read
9c1c3cc5-def0-4e5f-9f2c-4629ec927144
-

இந்தியாவின் கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் நேற்று முன்தினம் போர்ச்சுகீசிய காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிலை (படம்) திறக்கப்பட்டது. 12 லட்ச ரூபாய் செலவில், 400 கிலோ எடையில் இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இளையர்களிடம் காற்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ரொனால்டோவின் சிலை திறக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியது. ஆனால், இது ஒரு காலத்தில் கோவா போர்ச்சுகீசியர் பிடியிலிருந்ததை நினைவுகூர்வதாக இருக்கிறது என்று எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.