பொங்கலுக்கு பொலிவூட்டும் ரேக்ளா பந்தயம்

பொங்கலுக்கு பொலிவூட்டும் ரேக்ளா பந்தயம்

3 mins read
89f07397-311f-46c7-b075-faef3df2ff48
தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளத்தில் ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்கும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் ஆடவர். -
multi-img1 of 2

மகிழ்ச்சியை அதிகரித்துக் குதூகலமாக்கும் விளையாட்டுகளுக்கு பொங்கல் தருணத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பயிர் விளைச்சலைக் கொடுக்கும் கதிரவனுக்கும் மனிதனுக்கு உதவிகரமாக இருக்கும் மாடுகளுக்கும் இத்திருநாள் சமயத்தில் மனமார நன்றி கூறும் மக்கள், ஆங்காங்கே நம் பழந்தமிழரின் வீர விளையாட்டுகளுள் ஒன்றான மாட்டுவண்டிப் பந்தயங்களையும் நடத்தி பலதரப்பட்ட மக்களையும் பெரிதும் கவர்ந்து வருகின்றனர்.

ரேக்ளா வண்­டிப் பந்­த­யம் (Rekla Race) என்­பது திரு­வி­ழாக் காலங்­களில் தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் நடை­பெ­றும் காளை மாட்­டு­வண்­டிப் பந்­த­ய­மா­கும்.

தமிழ்­நாட்­டின் அவ­னி­யா­பு­ரம், விளாத்­தி­கு­ளம், ஒட்­டப்­பி­டா­ரம், உடு­ம­லைப்­பேட்டை, நாகர்­கோ­வில், பொள்­ளாச்சி, பண­கு­டி­யைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் இந்த ரேக்ளா வண்­டிப் பந்­த­யங்­கள் தொடர்ந்து நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

தஞ்­சா­வூர், திண்­டுக்­கல், தேனி, திருச்சி, கோயம்­புத்­தூர், சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம், ஈரோடு, கரூர் போன்ற இடங்­க­ளைச் சேர்ந்த மாட்­டு­வண்­டிப் போட்­டி­யா­ளர்­கள் ஏராளமானோர் இப்­போட்­டி­களில் கலந்­து­கொண்டு, தமிழ்ச் சமூ­கத்­தின் தொன்­று­தொட்டு ­வ­ரும் கலா­சா­ரத்தை இன்­றும் வளர்த்து வரு­கின்­ற­னர்.

பெரும்­பா­லும், இவ்­வ­கைப் பந்­த­யங்­களில் காளை மாடு­கள் ஈடு­படுத்­தப்­ப­டு­கின்­றன.

ஒரு­சில இடங்­களில் எரு­மைக் கிடா­வை­யும் குதி­ரை­யை­யும் இப்­பந்­த­யங்­களில் ஈடு­ப­டுத்­து­வ­தாக தக­வல்.

ரேக்ளா என்­பது ஒரு­வர் மட்­டும் அம­ரக்­கூ­டிய ஒரு­ சிறிய வகை மாட்டு வண்­டி­யா­கும். இதன் சக்­க­ரங்­கள் சிறிய அள­வி­லும் வேக­மாக சுழ­லக்­கூ­டிய வகை­யி­லும் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

நாட்டு மாடு காளை­களைப் பொது­வாக ஜல்­லிக்­கட்டு போட்­டிக்கு மட்­டு­மின்றி, ரேக்ளா பந்­த­யத்­துக்­கும் பயன்­படுத்தி வரு­கி­றார்­கள்.

இது­போன்ற போட்­டியை நிறைய திரைப்­ப­டங்­களில் பார்த்­தி­ருப்­போம்.

இந்­தப் போட்­டியை நடத்­து­வதற்­காக காளை­க­ளுக்கு பிரத்­தி­யேக பயிற்­சி­யும் அளிக்­கப்­ப­டு­கிறது.

இரண்டு காளை­களும் ஒரே வேகம், ஒரே உய­ரம் கொண்­ட­தாக இருக்­க­வேண்­டும் என்­றும் அப்­படி ஒத்து இருந்­தால்­தான் இந்­தப் போட்­டி­யில் வெற்­றி­பெற முடி­யும் என்­றும் போட்டியாளர்கள் கூறு­கின்­ற­னர்.

இப்­போட்­டி­கள் மிக அதிக அள­வில் மாட்­டுப் பொங்­க­லன்று நடை­பெ­று­கின்­றன.

குறைந்த நேரத்­தில் இலக்கை அடை­யும் வண்­டி­க­ளுக்­கும் வெற்றி­பெற்ற வண்டி உரி­மை­யா­ளர்­க­ளுக் கும் மாடு­க­ளுக்­கும் சிறப்­புப் பரி­சு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

மாட்­டின் கொம்­பு­களில் வெற்றி சால்­வை­கள் சுற்­றப்­பட்டு, மாலை­கள் அணி­விக்­கப்­பட்டு வெற்றி பெற்ற காளை­கள் கௌர­விக்­கப்­படு­கின்­றன.

வண்டி உரி­மை­யா­ள­ரின் வெற்­றியை ஊரார் அனை­வ­ருமே தங்­க­ளது வெற்­றி­யா­கக் கொண்­டாடி மகிழ்­கின்­ற­னர்.

தமி­ழர்­க­ளின் பண்­பாட்டு அடை­யா­ளங்­க­ளுள் ஒன்­றான மாட்டு­வண்­டி­யின் பயன்­பாடு அண்மைகால­மாக குறைந்­து­விட்ட போதி­லும் தென்மாவட்­டங்களி­லும் கொங்கு நாட்­டி­லும் இந்த வகைப் பந்­த­யங்­கள் மக்­க­ளின் வர­வேற்பை அதி­க­மா­கவே பெற்று வரு­கின்­றன.

பந்­த­யத்­தில் ஈடு­படும் காளை­களின் வயது, அவற்­றின் உய­ரத்­தின் அடிப்­ப­டை­யில் பெரி­யவை, நடுத்­த­ரம், கரிச்­சான், பூஞ்­சிட்டு என மாடு­கள் தரம்­பி­ரிக்­கப்­பட்டு, போட்­டிக்­கான தூரம் தீர்­மா­னிக்­கப் படு­கிறது.

பொங்­கல் பண்­டி­கை­யின்­போது ஜல்­லிக்­கட்டு போட்­டி­யைத் தவிர மஞ்­சு­வி­ரட்டு, ஏறு தழு­வு­தல், ரேக்ளா பந்­த­ய­மும் பிரம்­மாண்­ட­மா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது.

பெரிய மாடு என்­றால் பத்து மைல் தூரம், நடு மாடு என்­றால் எட்டு மைல், அடுத்தடுத்த வகை­கள் ஆறு மைல், ஐந்து மைல் தூரம் எனப் போக வர சேர்த்து கணக்­கிட்டு மாடு­க­ளைப் பிரித்து பந்­த­யத்தை ஏற்­பாடு செய்­கின்றனர்.

சிவ­கங்­கைக்கு ஒவ்­வொரு ஆண்­டும் ஆயி­ரம் வண்­டி­களில் மாடு­கள் பந்­த­யத்­திற்கு வருவ தாகவும் மாடு­க­ளு­டன் சேவல், ஆடு­களை வைத்­தும் போட்­டி­கள் நடை­பெற்று வருவதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

ெகாரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்தக் கொண்டாட்டங்ள் சூடுபிடிக்காமல் களையிழந்து உள்ளதாகவும் தகவல்கள் ெதரிவித்துள்ளன.