ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் அல்வா

ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் அல்வா

2 mins read
faa60468-223b-4f9f-b908-91ac695c910e
-

அல்வா என்­றால் யாருக்­குத்­தான் பிடிக்­காது? பொது­வாக கோதுமை, சர்க்­க­ரை­யி­லி­ருந்து செய்­யப்­படும் ஓர் இனிப்பு உண­வுப் பண்­டம் இது. 'அல்வா' என்ற சொல் அரே­பிய மொழி­யில் இருந்து வந்­த­தா­கும்.

அரே­பிய மொழி­யில் 'அல்வா' என்­ப­தற்கு இனிப்பு என்று பொரு­ளா­கும். அல்­வா­வில் பல­வகை உண்டு. இருப்­பி­னும், ஆரோக்­கிய வாழ்க்­கை­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க விரும்­பு­வோர் 'அல்வா'வைத் தொடத் தயங்­கு­வர். இப்­பி­ரி­வி­ன­ருக்கு ஆப்­பிள் அல்வா ஏற்றது.

இனிப்பு சாப்­பி­டும் ஆசை ஏற்­படும்­போ­தெல்­லாம், சுல­ப­மான இந்­தச் சமை­யல் குறிப்­பைக் கொண்டு ஆப்­பிள் அல்­வா­வைத் தயா­ரித்­து­வி­ட­லாம்.

ஆனால், கைக்கு வேலை தரு­வ­து­டன் இதைத் தயா­ரிப்­ப­தற்­குக் கொஞ்­சம் பொறு­மை­யும் வேண்டும்.

ஆப்­பி­ளைச் சாப்­பிட விரும்­பாத பிள்­ளை­கள் உங்­கள் வீட்­டில் இருந்­தால், அதே ஆப்­பி­ளைக் கொண்டு அல்வா தயா­ரித்து அவர்­க­ளுக்கு ஊட்­டி­விட்­டுப் பாருங்­கள்.

பால், பாலேடு இவை எது­வும் இல்­லா­மல் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தால், ஆப்­பிள் அல்­வாவை உண்ட பிற­கும் அதி­கம் சாப்­பிட்டது போன்ற உணர்வு உங்­க­ளுக்­குத் தோன்­றாது.

மேலும், சீனி­யின்றி இதைத் தயா­ரிக்க முடி­வ­தால் இனிப்­ப­ள­வை­யும் நம்­மால் கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்ள முடி­கிறது.

தேவையானவை:

7 ஆப்பிள் பழங்கள்

சீனி (விருப்பத்திற்கு ஏற்ப)

சிறிதளவு நெய்

2 மேசைக்கரண்டி தண்ணீர்

1 தேக்கரண்டி

இலவங்கப்பட்டைத் தூள்

1 தேக்கரண்டி வென்னிலா சாரம்

10 பாதாம்

10 முந்திரி

செய்முறை:

1. பழங்களைத் தண்ணீரில் கழுவிய பிறகு, ஒவ்வொரு ஆப்பிள் பழத்தின் தோலையும் நீக்கவும்.

2. விதைகள், பழத்தின் நடுப்பகுதியை அகற்றிவிட்டு பழங்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

3. கடாயில் 2 மேசைக்கரண்டி நெய்யை உருக்கி, நறுக்கிய பழங்களை அதில் போடவும்.

4. நெருப்பின் அளவைக் குறைத்து ஐந்து, ஆறு நிமிடங்களுக்கு பழங்களை வதக்கவும். 2 மேசைக்கரண்டி தண்ணீரைச் சேர்த்து மீண்டும் வதக்கவும்.

5. கடாயை 15 நிமிடங்களுக்கு மூடிய பிறகு ஆப்பிள் துண்டுகளை நசுக்கவும்.

6. ஆப்பிள் பழத்தில் இனிப்பு இருந்தால் சீனி வேண்டாம்.

7. சிறிது நெய் சேர்த்து சுமார் 10 நிமிடங்களுக்கு வதக்கவும்.

8. இலவங்கப்பட்டைத் தூள், வென்னிலா சாரம், சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட பாதாம், முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.

9. ஆப்பிள் அல்வா கலவை உருவாகும்வரை கிண்டவும்.

படம்: இந்திய ஊடகம்