சட்னி என்றால் சும்மாவா?

சட்னி என்றால் சும்மாவா?

2 mins read

மற்ற உணவு வகை­க­ளு­டன் தொட்டு சாப்­பி­டு­வ­தற்­குத் தயா­ரிக்­கப்­ப­டு­வதே சட்னி. காய்­க­றி­கள், உப்பு, தக்­காளி, மிள­காய், கொத்­த­மல்லி, கறி­வேப்­பிலை போன்ற நறு­ம­ணம் தரக்­கூ­டிய பொருள்­களு­டன் அரைத்து பின்­னர் எண்­ணெயில் தாளித்து பல வித­மான சட்னி வகை­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

தோசை, இட்லி, சப்­பாத்தி, பூரி போன்ற வித­வி­த­மான உணவு வகை­களு­டன் மக்­கள் சட்­னி­யைக் கலந்து சாப்­பி­டு­கின்­ற­னர்.

தமி­ழில் 'துவை­யல்' என்­றும் தெலுங்­கில் 'தொக்கு' என்­றும் சட்­னி­யின் சற்று கெட்டி வடி­வத்­தைக் குறிப்­பி­டு­வர்.

இப்­படி பல உண­வு­வ­கை­க­ளுக்­குத் துணை­யாக பக்­கத்­தில் இருக்­கும் இந்த சட்­னி­யில் அப்­படி என்­ன­தான் இருக்­கிறது?

சுவை­யில் ஒரு சம­நிலை கொடுப்­பது இந்த சட்னி என்­ப­து­தான் உண்மை.

உதா­ர­ணத்­திற்கு இட்லி, தோசை­யு­டன் பரி­மா­றப்­படும் தேங்­காய் சட்­னியை எடுத்­துக்­கொள்­வோமே.

இட்லி மிக மிரு­து­வான ஓர் உணவு­வகை. சிறி­த­ளவு புளிப்பு அதில் கலந்­தி­ருக்­கும். அதில் உள்ள மாவுச்­சத்­துக்­குக் காரம் தேவைப்­படும். இத­னால்­தான் பச்சை மிள­காய் போடப்­ப­டு­கிறது.

பஞ்­சு­போன்ற தன்மை இட்­லிக்கு உள்­ள­தால், அதைச் சமப்­ப­டுத்­து­வ­தற்கு தேங்­காய், பருப்பு ஆகி­ய­வற்­றின் சுவை தேவைப்­ப­டு­கிறது.

தேங்­கா­யில் உள்ள பால், பச்சை மிள­காய் ஏற்­ப­டுத்­தும் காரத்தை மட்­டுப்­ப­டுத்­தும். தாளித்த கறி­வேப்­பிலை ருசியை மேலும் ஒரு நிலைக்கு உயர்த்தி­வி­டு­கிறது.

மேலே தூவப்­படும் கொத்­த­மல்லி இலை­க­ளால் பளிச்­சென்ற ஓர் அழகு அந்த சட்­னிக்கு வந்­து­வி­டு­கிறது. தாளித்­த­லில் கலந்த கடுகு, வாயில் நறுக்­கென்று படு­வ­து­டன் தேங்­கா­யின் வெள்ளை நிறத்­துக்கு நேர்­மா­றாக கறுப்­பா­கத் தோற்­ற­ம­ளிக்­கிறது.

எத்­தனை அம்­சங்­கள் பொதிந்­த­தாக இந்த சட்னி உள்­ளது?

சட்னி தயா­ரிக்­கும்­போது ஏழு அம்­சங்­களை நாம் கருத்­தில் கொள்­ள­லாம்.

முத­லில், சமைத்த உண­வுப் பொருள்­கள். பூசணி, கத்­தரி போன்­றவை சமைத்த பிற­கு­தான் ருசி தரக்­கூ­டி­யவை. இரண்­டா­வது சமைக்­கப்­ப­டாத உண­வுப் பொருள்­கள். பழங்­கள் போன்­றவை சமைக்­காத நிலை­யி­லும் ருசி தரும். மூன்­றா­வ­தாக, கடலை, முந்­திரி, தேங்­காய், பருப்பு போன்­றவை நறு­நறுப்­புத் தன்­மை­யு­டைய உண­வுப் பொருள்­கள். இவற்றை நெருப்­பில் வாட்­டிப் பயன்­ப­டுத்­த­லாம்.

அதை­ய­டுத்து நான்­கா­வ­தாக மசாலா. இஞ்சி, பூண்டு, வெங்­கா­யம், சீர­கம், கொத்­த­மல்லி போன்­ற­வற்­றால் நறு­ம­ணம் அதி­க­ரிக்­கும்.

உப்­பில்­லாத பண்­டம் குப்­பை­யிலே என்­போம். சட்­னிக்கு உவர்ப்பு இருப்­பது முக்­கி­யம்.

ஆறா­வது அம்­சம் அமி­லம் என்­ப­தா­கும். எலு­மிச்சை சாறு, புளி போன்­ற­வற்­றால் புளிப்­புத்­தன்மை ஏற்­படும். இத­னால் எச்­சில் சுரப்­பது அதி­க­ரிக்­கும். உணவு கூடு­தல் ருசி­யு­டை­ய­தாகத் தோன்­றும்.

ஏழா­வது அம்­சம் இனிப்­புத் தன்மை. மற்ற சுவை­களை அது மேலும் ஒரு நிலைக்கு உயர்த்­தும். இந்த இனிப்பு சீனி, வெல்­லம், தேன் போன்­ற­வற்­றின் மூலம் கிடைக்­கும்.