அரை கப் பாசிப்பருப்பை முதலில் அடுப்பிலிட்ட கடாயில் பொன்னிறம் ஆகும்வரை எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளவும். வாயில் மென்று சாப்பிடும் அளவுக்கு பாசிப்பருப்பை வறுத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பு அதிகம் சிவந்துவிட்டால் சட்னியிலிருந்து கருகிய வாடை வீசும்.
வறுபட்ட பாசிப்பருப்பை வேறொரு தட்டில் வைத்து ஆற வைத்துக் கொள்ளவும். வறுத்த பாசிப்பருப்பு ஆறிய பிறகு அதைப் பொடியாக்கிக்கொள்ளவும். பொடியான பின்னர், அதனுடன் அரை கப் தேங்காய் துருவல், இரண்டு பச்சை மிளகாய், ஒரு சிறிய இஞ்சித்துண்டு, உப்பு தேவையான அளவு ஆகியவற்றுடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள பொருத்தமாக இருப்பதுடன் உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடிய ஒரு சட்னி வகை இது.

