பேரின்பம் தரும் பழைய கடைத்தொகுதிகள்

பேரின்பம் தரும் பழைய கடைத்தொகுதிகள்

1 mins read
10933790-98f9-499a-a3fc-b503666f7533
நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஹாலந்து ரோடு கடைத்தொகுதியின் படம். பழைய வடிவில் இருக்கும் இதுபோன்ற கடைத்தொகுதிகளை சிலர் இன்னமும் விரும்புகின்றனர்.கோப்புப் படம் / எஸ்பிஹெச் மீடியா -

கண்­ணைப் பறிக்­கும் நவீன கடைத்­தொ­கு­தி­க­ளைக் கொண்ட சிங்­கப்­பூ­ரில் இன்­ன­மும் சில பழைய 'ஸ்ட்­ராட்டா மால்ஸ்' எனும் கடைத்­தொகு­தி­கள் இயங்கி வரு­கின்­ற­ன. ஹாலந்து ரோடு கடைத்­தொ­குதி, குவீன்ஸ்வே கடைத்­தொ­குதி, பிராஸ் பசார் காம்பிளக்ஸ் கடைத்­தொ­குதி ஆகி­யவை இவற்­றில் சில.

நவீன கடைத்­தொ­கு­தி­க­ளைப் போல் அல்­லா­மல் 'ஸ்ட்­ராட்டா' கடைத்­தொ­கு­தி­க­ளின் பகு­தி­கள் வெவ்­வேறு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு சொந்­த­மா­னவை. அவர்­கள் பிற­ருக்கு அப்­ப­கு­தி­களை வாட­கைக்கு விடு­வர். கொவிட்-19 சூழ­லால் நவீன கடைத்­தொ­கு­தி­க­ளை­விட 'ஸ்ட்­ராட்டா' கடைத்­தொ­கு­தி­க­ளில்­தான் வர்த்­த­கம் அதி­கம் பாதிப்­ப­டைந்­துள்­ளது. செல­வைக்­கூட ஈடு­கட்­ட­மு­டி­யாத சில வர்த்­த­கர்­கள் மனத்­தி­ருப்­திக்­காக இவற்­றில் கடை­க­ளைத் தொடர்ந்து நடத்­து­கின்­ற­னர். வாடிக்­கை­யா­ளர்­கள் சில­ரும் இவற்­றுக்­குச் செல்ல விரும்­பு­வதுண்டு.

ஆனால், 'ஸ்ட்­ராட்டா' கடைத்­தொ­கு­தி­களில் உள்ள கடைக்­கா­ரர்­கள் சில­ரின் வர்த்­த­கம் 90களில் இருந்­த­தைக் காட்­டி­லும் பாதிக்கு மேல் சரிந்­துள்­ளது. இணைய வர்த்­தக முறை­க­ளைப் பின்­பற்­ற­வும் இவர்­கள் சிர­மப்­ப­டு­கின்­ற­னர்.

'ஸ்ட்­ராட்டா' கடைத்­தொ­கு­தி­க­ளின் வருங்­கா­லம் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. எனி­னும், சிங்­கப்­பூ­ரின் வர­லாற்றை நினை­வூட்­டும் இவை தொடர்ந்து செழிக்­கும் என்ற நம்­பிக்­கை­யையும் கொண்­டுள்­ள­னர் சிலர்.