யுனைடெட்டின் வெற்றியைத் தடுத்த முன்னாள் லிவர்பூல் வீரர்

யுனைடெட்டின் வெற்றியைத் தடுத்த முன்னாள் லிவர்பூல் வீரர்

1 mins read

பர்­மிங்­ஹம்: நான்­காண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் அமர்க்­க­ள­மாக இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­ காற்பந்தில் அடி­யெடுத்து வைத்­துள்­ளார் பிரே­சில் வீரர் ஃபிலிப் கொட்­டீன்யோ.

லிவர்­பூல் குழு­விலிருந்து பார்சி­லோ­னா­விற்கு இடம்­பெ­யர்ந்த கொட்­டீன்­யோவை இந்தப் பருவத்தின் இறு­தி­வரைக்­கும் கட­னா­கப் பெற்­றுள்­ளது ஆஸ்­டன் வில்லா குழு.

மான்­செஸ்­டர் யுனை­டெட் குழு­விற்­கெ­தி­ராக நேற்று முன்­தி­னம் பின்­னி­ர­வு நடந்த ஆட்­டத்­தில் மாற்று வீரராகக் களமிறங்கிய கொட்டீன்யோ, சற்று நேரத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

ஆட்­டம் முடிய 13 நிமி­டங்­கள் இருந்­த­போது ஜேக்­கப் ராம்சி கோல் போட உத­விய கொட்­டீன்யோ, அடுத்த ஐந்­தா­வது நிமி­டத்­தில் தம் பங்­கிற்­கும் ஒரு கோலைப் போட்­டார். முன்னதாக, யுனை­டெட்­டின் இரண்டு கோல்­க­ளை­யும் புருனோ ஃபெர்னாண்­டஸ் அடித்­தி­ருந்­தார்.