போராட்டம் வீண்; ஜோக்கோவிச் ஏமாற்றம்

போராட்டம் வீண்; ஜோக்கோவிச் ஏமாற்றம்

1 mins read
072d4172-6f9f-434d-a1de-78689eaca42a
-

மெல்­பர்ன்: தமது விசாவை ஆஸ்­தி­ரே­லிய அரசு ரத்து செய்­ததை எதிர்த்து உல­கின் முதல்­நிலை டென்­னிஸ் ஆட்­டக்­கா­ரர் நோவாக் ஜோக்­கோ­விச், 34 (படம்), தொடுத்த மேல்­மு­றை­யீட்டு மனுவை நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது.

இத­னால், கொவிட்-19 தடுப்­பூசி நிலை தொடர்­பி­லான அவ­ரது 11 நாள் போராட்­டம் முடி­விற்கு வந்­தது. அத்­து­டன், அவ­ரது 21வது கிராண்ட் ஸ்லாம் பட்­டக் கன­வும் கலைந்­து­போ­னது.

தீர்ப்­பால் பெரும் ஏமாற்­றமடைந்­த­தா­கக் கூறினார் ஜோக்­கோ­விச்.

நீதி­மன்­றத் தீர்ப்­பை­ய­டுத்து, இன்­னும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத செர்­பி­யா­வின் ஜோக்­கோ­விச் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இருந்து நேற்று மாலை துபாய் புறப்பட்டுச் சென்றார்.

முன்­ன­தாக, தடுப்­பூசி போடா­தோ­ருக்கு ஆஸ்­தி­ரே­லி­யப் பொது விரு­துப் போட்­டி­களில் பங்­கேற்க அனு­ம­தி­யில்லை என்று அறி­விக்­கப்­பட்­டது. ஆனா­லும், மருத்­து­வக் கார­ணங்­க­ளுக்காக ஜோக்­கோ­விச்சிற்கு விதி­வி­லக்கு அளிக்­கப்­பட்டு, அவர் ஆஸ்­தி­ரே­லி­யப் பொது விரு­துப் போட்­டி­களில் விளை­யாட அனு­மதி வழங்­கப்­பட்­டது. இது பெரும் சர்ச்­சை­யைக் கிளப்­பி­யது.