நல்லிணக்கம் வளர்க்கும் பொங்கல்

நல்லிணக்கம் வளர்க்கும் பொங்கல்

2 mins read
5fbbfe8e-c8c5-4108-b43e-89d65668e5bb
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பொங்கல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த புக்கிட் பாஞ்சாங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் திரு லியாங் எங் ஹுவா (வலமிருந்து இரண்டாவது), பொங்கல் பானைக்கு வண்ணம் தீட்டுகிறார். வலக்கோடியில் திரு பெ.மூர்த்தி. இடப்படம்: நிகழ்ச்சியில் 8 அடி அகலம், 8 அடி நீளம் கொண்ட கோலம். படங்கள்: ஏற்பாட்டாளர்கள் -

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

சீன கலா­சா­ரத்­தின் 'லயன் டான்ஸ்' அங்­க­மும் கர­காட்­டம், பொய்க்­கால் குதிரை போன்ற இந்­திய பாரம்­ப­ரிய நட­னங்­களும் புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்­றத்­தின் பொங்­கல் கொண்­டாட்­டத்­தைத் தொடங்கி வைத்­தன. பின்­னர் இந்­திய, மலாய், சீன பாட­லு­டன் கூடிய நட­னங்­கள் வந்­தி­ருந்­தோ­ரின் செவி­க­ளுக்­கும் கண்­க­ளுக்­கும் விருந்­த­ளித்­த­து­டன் சிங்­கப்­பூ­ரின் பல இன, பல சமய, பல கலா­சார சூழ­லின் பிர­தி­ப­லிப்­பாக அமைந்­தன.

கடந்த 15 ஆண்­டு­க­ளாக ஒவ்­வோர் ஆண்­டும் பிரம்­மாண்ட முறை­யில் பொங்­கல் கொண்­டாட்­டத்­தைச் சீரும் சிறப்­பு­மாக நடத்­தி­வ­ரும் புக்­கிட் பாஞ்­சாங் ஒருங்­கி­ணைப்பு மற்­றும் இயல்­பு­ரிமை குழு நோய்ப் பர­வல் சூழ­லுக்கு இடையே இரண்­டா­வது ஆண்­டாக பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளைக் கருத்­தில் கொண்டு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 10 மணி முதல் பிற்­ப­கல் 2 மணி வரை நடத்­தி­யுள்­ளது.

புக்­கிட் பாஞ்­சாங் அடித்­தள அமைப்­பு­க­ளின் ஆலோ­ச­கர் திரு லியாங் எங் ஹுவா கலந்­து­கொண்டு பொங்­கல் நிகழ்ச்­சி­யைத் தொடங்கி வைத்­தார்.

"இது­போன்ற கலா­சார நிகழ்­வு­களை நாம் கொண்­டா­டு­வ­தன் மூலம் பாரம்­ப­ரி­யத்­தைக் கட்­டிக்­காக் கிறோம். தொடர்ந்து நம் கலை­களை­யும் கலா­சா­ரத்­தை­யும் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­கும் நாம் கொண்டு செல்­வோம்," என்­றார் திரு லியாங்.

பொங்­கல் கொண்­டாட்­டங்­க­ளின் பிர­தான அங்­க­மாக ரத்த நன்­கொடை நிகழ்­வுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்டு 70க்கும் மேற்­பட்­டோர் அன்­றைய தினம் ரத்த நன்­கொடை அளித்­த­னர்.

பொங்­கல் பானைக்கு வண்­ணம் தீட்­டு­வது, பொங்­கல் வைப்­பது, ரங்­கோலி கோலமிடு­வது உள்பட நட­வ­டிக்­கை­களும் பார்­வை­யா­ளர் அங்­கங்­களும் நிகழ்ச்­சி­யில் இணைந்­த­வர்­க­ளுக்­குப் பர­வ­சம் ஊட்­டின.

தலா நாற்­பது பேர் கொண்ட இரு குழுக்­கள் நேர­டி­யா­கப் பங்­கேற்­றது மட்­டு­மல்­லா­மல் மெய்­நி­கர் கொண்­டாட்­ட­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த நிகழ்ச்­சி­யில் மேலும் பல குடி­யி­ருப்­பா­ளர்­கள் இணை­யம் மூலம் கண்­டு­க­ளித்­த­னர்.

"பல இனத்­த­வ­ரை­யும் கவ­ரும் வண்­ணம் பொங்­கல் நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்­வதை நாங்­கள் பல ஆண்­டு­க­ளாக நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளோம். பொங்­கலை திரு­வி­ழா­வா­கக் கொண்­டா­டும் அதேநேரம் கூடிய விரை­வில் நோய்ப் பர­வல் சூழல் முடிந்து மீண்­டும் பெரிய அள­வி­லான விழா­வாகப் பொங்­க­லைக் கொண்­டாட ஆவ­லா­கக் காத்­தி­ருக்­கி­றோம்," என்­றார் ஏற்­பாட்­டுக் குழுவை வழி­ந­டத்­திய அடித்­த­ளத் தலை­வ­ரும் புக்­கிட் பாஞ்­சாங் ஒருங்­கி­ணைப்பு மற்­றும் இயல்­பு­ரிமை குழு­வின் தலை­வ­ரு­மான திரு பெ.மூர்த்தி.

தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரி­யத்தை அனை­வ­ரி­டத்­தி­லும் கொண்டுசெல்ல கலந்­து­ற­வா­டல் அம்­சங்­க­ளு­டன் நிகழ்ச்சி ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.