உப்பில் பல வகை; பல குணங்கள்

உப்பில் பல வகை; பல குணங்கள்

3 mins read
91708b09-77db-4e02-b700-f96dd631029c
இமயமலையில் விளையும் இந்துப்பு. படம்: ஊடகம் -

'உப்­பில்­லாப் பண்­டம் குப்­பை­யிலே' என்ற பழ­மொ­ழிக்கு ஏற்ப உப்­பின்றி சாப்­பிட முடி­யாது. எனி­னும், அதனை ஒரு அள­வு­டன் சேர்த்­துக்­கொள்­வது முக்­கி­யம். அள­வுக்கு மீறி­னால் அமிர்­த­மும் நஞ்­சா­கும் என்­பது இந்த உப்பு விஷ­யத்­தில் நூறு விழுக்­காடு பொருந்­தும்.

அதி­கப்­ப­டி­யான உப்பு நமது உடலை நோய்­க­ளுக்­கான கூடார மாக்கிவிடும். அதே­வேை­ள­யில், உப்­பில் இருக்­கும் அயோ­டின் சத்து குறை­பாட்­டால் லட்­சக்­கணக்­கான மக்­கள் தைராய்டு பிரச்சினை யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இதைச் சரி­செய்ய செயற்கையாக செறி­வூட்­டப்­பட்ட அயோ­டின் உப்பு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

இத­னால், சரு­மத்­தில் எரிச்­சல், அடிக்­கடி தாகம் எடுப்­பது உள்­ளிட்ட பிரச்­சினை­கள் ஏற்­ப­ட­லாம்.

இந்த அயோ­டின் உப்­புக்குப் பதி­லாக இயற்­கை­யான கடல் உப்பு, கறுப்பு உப்பு, சிவப்பு உப்பு ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்­த­லாம்.

ஐவகை உப்புகள்

இந்­தி­யா­வில் பழங்­கால மக்­கள் ஐவகை உப்­பு­களைப் பயன்­படுத்தி வந்­துள்­ள­னர். சமுத்ரா எனப்­படும் கடல் உப்பு, மண்­ணில் இருந்து எடுக்­கப்­படும் உத்­பேஜா, உறைந்து படி­வங்­க­ளாக கிடைக்­கும் ரோமகா உப்பு, அவுத்­பிதா, சைந்­தவா ஆகிய உப்பு வகை­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சாணக்­கியர் எழு­திய அர்த்தசாஸ்­தி­ரம் நூலில் குறிப்­பி­டப்­பட்­டு­ள­ளது.

கல் உப்பு, இந்­துப்பு

கல் உப்­பில் சோடி­யம் குளோ­ரைடு உள்­ளது. இந்­துப்­பில் பொட்­டா­சி­யம் குளோ­ரைடு உள்­ளது. இத­னைக் கருத்­தில் கொண்­டு தான் கல் உப்­புக்குப் பதி­லாக பொட்­டா­சி­யம் குளோ­ரைடு உள்ள இந்­துப்­பைச் சமை­ய­லில் பயன்­படுத்தும்படி சொல்கின்றனர்.

இம­ய­ம­லை­யி­லும் வடமாநி­லங்­களில் பஞ்­சாப், ஹரி­யானா போன்ற பகு­தி­க­ளி­லும் பாறை களி­லி­ருந்து இந்த இந்­துப்பு வெட்டி எடுக்­கப்­ப­டு­கிறது.

இந்­துப்­பில் உட­லுக்குத் தேவை யான கால்­சி­யம், இரும்­புச்­சத்து, துத்­த­நா­கம், பொட்­டா­சி­யம், மெக்­னீ­சி­யம், காப்­பர் போன்ற பல­வித சத்­து­களும் உள்­ளன. சித்த மருத்­து­வ­மும் இந்­துப்­புக்குத் தனி இடம் கொடுத்­துள்­ளது.

வெள்ளை நிற உப்பை சமை­யலில் அதி­க­மாகப் பயன்­ப­டுத்து வோம். ஆனால், கறுப்பு நிற உப்பு பற்றி யாருக்­கும் தெரிந்­தி­ருக்­காது. உண்­மை­யில், இந்த கறுப்பு உப்­பில்­தான் ஏராளமான தாதுக்­கள், வைட்­ட­மின்­கள் அடங்­கி­யுள்­ளன. அத்­து­டன், கறுப்பு உப்­பில் இரும்­புச் சத்து, பொட்­டா­சி­யம், இதர தாதுக்­களும் காணப்­ப­டு­கின்­றன.

கடல்நீரி­லி­ருந்து நேரி­டை­யாக இயற்கை முறை­யில் எவ்­வித வேதிப்பொரு­ளும் கலக்­கா­மல் இருப்­பதுதான் கடல் உப்பு.

உப்பை பரி­ச­ளித்த மக்கள்

சுமார் 8,000 ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே உப்பை பதப்­ப­டுத்­தும் பழக்­கம் மக்­க­ளின் வழக்­க­மாக இருந்து வந்­துள்­ள­தற்­கான சான்­று­கள் கிடைக்­கப்­பட்­டுள்­ளன. ருமே­னியா நாட்­டின் ஒரு பகு­தி­யில் வாழ்ந்த மக்­கள் ஊற்று நீரை கொதிக்க வைத்து உப்பை பிரித்­தெ­டுத்­துள்­ள­னர். பண்­டைய எபி­ரே­யர்­கள், கிரேக்­கர்­கள், ரோமானி யர்­கள், பைசா­னி­யர்­கள், எகிப்­தி­யர்­கள், இந்­தி­யர்­கள் போன்ற நாட்­டி­னர் உப்பை பரிசளிக்­கும் வழக்­கத்­தைக் கொண்­டி­ருந்­த­னர்.

தரமறிய இரு குறிப்­பு­கள்

இந்த உப்­பின் தூய்­மை­யைக் கண்­ட­றிய இந்­திய உண­வுப் பாது காப்பு மற்­றும் தர நிர்­ணய ஆணை யம் (எஃப்எஸ்­எஸ்­ஏஐ) இரு உத­விக்­கு­றிப்­பு­களை கூறி­யுள்­ளது.

குறிப்பு 1: ஒரு குவளை தண்­ணீ­ரில் ஒரு மேசைக்கரண்டி உப்பை எடுத்து நன்­றாகக் கலக்­க­வும். உப்­பில் சுண்­ணாம்பு கலப்­படம் செய்­யப்­பட்­டி­ருந்­தால் அது வெண்மை நிற­மாக மாறும். கரை­யாத பிற அசுத்­தங்­கள் அடி­யில் படி­ந்துவிடும்.

குறிப்பு 2: ஒரு உரு­ளைக்­கிழங்கை இரண்டாக வெட்­டி, வெட்­டப்­பட்ட மேற்­பரப்­பில் லேசாக உப்ைபத் தூவி­வி­டுங்­கள். ஒரு நிமி­டம் காத்­தி­ருக்­க­வும். இப்­போது இரண்டு மாதி­ரி­க­ளி­லும் இரண்டு சொட்டு எலு­மிச்சை சாறு விடவும். உப்­பில் கலப்­ப­டம் இருந்­தால், உரு­ளைக்­கி­ழங்­கின் மேற்­ப­ரப்பு நீல நிற­மாக மாறும்.