அவகாடோ பழமும் ஆய்வு ரகசியமும்

அவகாடோ பழமும் ஆய்வு ரகசியமும்

2 mins read
ea1715b8-3634-449e-a509-c461e0a1373c
வெண்ணெய்ப் பழம் என்றழைக்கப்படும் அவகாடோ. படம்: ஊடகம் -

வெண்­ணெய்ப் பழம், பட்­டர் ஃப்ரூட், ஆனைக்­கொய்யா, முதலைப் பேரி என்­றெல்­லாம் அழைக்­கப்­படும் அவ­காடோ பழம் (Avocado), அன்­றாட நார்ச்­சத்து தேவை­யில் 40% பூர்த்தி செய்­கிறது. அதோடு, இப்­ப­ழங்­கள் மருத்­து­வ­க் கு­ணம் நிறைந்­த­வை­யா­க­வும் உள்­ளன.

வெண்­ணெய்ப் பழங்­கள் மெக்­சிகோ, மத்­திய அமெ­ரிக்­காவை பூர்­வீ­க­மா­கக் கொண்­டவை. ஆனால், அவை வட அமெ­ரிக்கா உட்­பட உல­கின் பல பகு­தி­களிலும் பயி­ரி­டப்­ப­டு­கின்­றன.

அமெரிக்காவின் கலி­போர்­னியா மாநிலம் இந்த வெண்­ணெய்ப் பழங்­களை உற்­பத்தி செய்­வ­தில் முன்­னணி­யில் திகழ்கிறது. இங்குள்ள 5,000க்கும் மேற்­பட்ட அவ­காடோ பண்­ணை­களில் இப்பழங்­கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன.

ஆரோக்­கி­ய­மான உண­வுப்பட்­டி­ய­லில் உள்ள அவ­காடோ பழத்தில் 25க்கும் மேற்­பட்ட ஊட்­டச்­சத்­து­கள் அடங்­கி­யுள்­ளன. இதிலுள்ள சத்­து­கள் நோயின் பிடி­யி­லி­ருந்து காக்­க உதவுகின்றன.

வாழைப்­ப­ழத்­தில் இருக்­கும் பொட்­டா­சி­யத்தைவிட அவ­காடோ வில் 35% அதி­க­மா­கவே உள்­ளது. இத­னால், உயர் ரத்த அழுத்­தம் அதிகரிப்பது தணியும்.

உலகில் விளையும் பெரும்­பாலான பழங்­களில் மாவுச்சத்து, புர­தம், நார்ச்­சத்து போன்­ற­ சத்துகள் உள்ளன. ஆனால், அதி­க­ளவில் ஆரோக்­கிய கொழுப்­புச் சத்தைக் கொண்டிருப்­ப­தில்லை.

இந்த அவ­காடோ பழத்­தில் பல ஊட்­டச்­சத்­து­களும் அடங்கி இருப்­ப­து­டன், அதி­க­ளவு ஆரோக்­கிய மான கொழுப்­புச் சத்­துகளும் நிறைந்­துள்­ளன.

இப்பழம் பற்றி அண்­மை­யில் நடத்­தப்­பட்ட ஒரு ஆய்­வின் முடி­வு­கள் 'ஜர்­னல் ஆஃப் நியூட்­ரி­ஷன்' இத­ழில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அதன்­படி, தின­மும் ஒரு அவ­கடோ பழத்தை உட்­கொள்­வ­தால் வயிற்­றுக் கொழுப்பு குறை­வ­தாக கண்­ட­றிந்­துள்­ள­னர்.

'ஆர்த்­த­ரைட்­டீஸ்' பாதிப்பு உள்­ள­வர்­கள் இப்பழத்தைச் சாப்­பிட்­டால் மூட்­டு­வலி குண­மா­கும் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.

இல்­லி­னாய்ஸ் பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர்­கள் நூற்­றுக்­கணக்­கான முதி­ய­வர்­க­ளைக் கொண்டு 12 வார சோத­னையை நடத்­தி­னர். அதில், முதியவர்கள் இரண்டு குழு­வி­ன­ராகப் பங்­கேற்­ற­னர்.

ஒரு குழு­விற்கு அவ­காடோ பழத்துடன் தின­சரி உணவும் மற்ெறாரு குழு­வி­ன­ருக்கு இப்பழம் சேர்க்­கப்­படாமலும் உணவு வழங்கப்பட்டது.

ஆய்­வின் ஆரம்­பத்­தி­லும் முடி­வி­லும் பங்­கேற்ற முதி­ய­வர்­க­ளின் அடி­வ­யிற்றுக் கொழுப்­பை­யும் அவர்­க­ளின் இனிப்­புத் தன்­மை­யை­யும் ஆய்­வா­ளர்­கள் ஆய்வு செய்­த­போது, அவ­காடோ பழத்தை எடுத்­துக்­கொண்­ட­வர்­க­ளுக்கு சிறந்த முறை­யில் எடை­யும் தொப்­பைக் கொழுப்­பும் குறைந்­தி­ருந்­தது தெரியவந்த­தா­கக் கூறி­யுள்­ள­னர்.

அவ­காடோ­வில் கொழுப்பு அதி­கம் இருந்­தா­லும் மாவுச்சத்து குறை­வா­க­வும் நார்ச்­சத்து அதி­க­மா­க­வும் இருக்­கிறது என்று விளக்­கம் அளித்துள்ள மருத்­து­வர் ஜெசிகா மார்­கஸ், இப்பழத்தில் காணப்­படும் ஃபைட்டோ வேதிப்­பொ­ருட்­கள் புற்று­நோய் செல்­க­ளின் வளர்ச்­சியைத் தடுத்து, தாக்கி அழிக்­கக்­கூ­டி­ய தன்மை கொண்டது எனவும் கூறியுள்ளார்.

இப்பழத்தை தின­மும் உட்­கொள்­பவர்களின் உடல் எடை, இடுப்­புச் சுற்­ற­ளவு, பிஎம்ஐ எனும் உடல் எடை குறி­யீட்டு எண் போன்­றவை குறை­வான அள­வில் இருப்­ப­தாகவும் பிற ஆய்­வு­கள் தெரி­விக்கின்றன.