சுபாஷ் ராஜேந்திரன், 29
ஆலோசகர்
உயரம்: 1.64 மீட்டர்
எடை: 59 கிலோ கிராம்
உடற்பயிற்சி முறை: நான் தினமும் உடற்பயிற்சி செய்வேன். உடலை வலிமையாக்கும் பல்வேறு தசைப் பயிற்சிகளுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் ஒதுக்குகிறேன். அதேேபால், இதயத்தை வலு வாக்கும் பயிற்சிகளுக்கும் இரண்டு நாள்கள் ஒதுக்குகிறேன்.
எனது உடற்பயிற்சிகளில் மின் தசை பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்கிறேன். இதயத்தை வலுவாக்கும் பயிற்சிக்கு நான் ஓடும் பயிற்சியையும் HIIT என்ற உயர்-தீவிர இடைவெளி பயிற்சி யையும் செய்கிறேன்.
உணவு: எனது உணவில் முக்கியமாக பழுப்பு அரிசி, வறுத்த அல்லது 'பேக்' செய்யப்பட்ட சுட்ட கோழி இறைச்சியை சேர்த்துக்கொள்கிறேன். என்னுடைய ரொட்டிகளில் டூனாவும் சோயா பாலும் கலந்து சாப்பிடுவேன்.
நான் வாரத்தில் ஒருநாள் துரித உணவு சாப்பிடுவேன். அதில் சிப்ஸ் அல்லது புளிப்பு கம்மிஸ் போன்ற சுவையான தின்பண்டங்களையும் ஒரு நாளைக்கு ஒரு முறை சேர்த்துக்கொள்வேன். நான் கொழுப்பு இறைச்சியைத் தவிர்த்து, சிவப்பு இறைச்சியை சேர்த்துக் கொள்கிறேன். தினமும் காபி அருந்துவேன் என்கிறார்.

