ஃப்ரூட் பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான மாலை நேர சிற்றுண்டியாக உள்ளது. இதையே முட்டைப் பணியாரமாக செய்துகொடுத்தால் குழந்தைகள் காலை உணவை தவிர்க்காமல் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
காலை நேரத்தில் பசியாறுவதற்கு சிறந்த உணவாக இருப்பது முட்டை. அந்த முட்டையை வழக்கமாக அரை வேக்காட்டில் செய்துகொடுக்காமல், முட்டை அடை (ஆம்லெட்), பொரியல் என்று ஒரே மாதிரியாகவும் இல்லாமல் வித்தியாசமாக பணியாரமாக செய்து தரலாம்.
முட்டைப் பணியாரத்துக்கு
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு- ஒரு கப், முட்டை - 2, சின்ன வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 1, கறிவேப்பிலை - 1 கொத்து, கடுகு-தாளிக்க, உளுத்தம்பருப்பு - தேவையான அளவு, உப்பு-தேவையான அளவு, எண்ணெய்-2 மேசைக்கரண்டி.
செய்முறை:
முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். அதை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி மாவுடன் நன்றாக கலந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு கலவைக்கு ஏற்ப தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் குழிப்பணி யாரக்கல்லில் (படம்) சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் முட்டை கலந்த மாவுக்கலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவேண்டும். மாவு வெந்ததும் பிரட்டி எடுத்தால் சுவையான முட்டைப் பணியாரம் தயார்.
ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவிவிட்டு, கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அதில், சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
4. பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
5. தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
6. தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.

