மனம் தெளிய பிடித்த வேலையில் ஆர்வம்

மனம் தெளிய பிடித்த வேலையில் ஆர்வம்

2 mins read
c617a087-8b35-45d9-b1a9-c0559576afd1
-

கடந்த ஈராண்­டு­க­ளா­கத் தொட­ரும் கொவிட்-19 சூழலால் பெரும்­பாலான மக்­கள் மன அழுத்­தத்­தால் பாதிக்கப்பட்டு வரு­கின்­ற­னர்.

இந்த மன அழுத்­தம் குறைந்து மனம் தெளி­வ­டைந்து சரி­யான முடி­வு­களை எடுக்க சில வழி­முறை­களை 'த நியூயார்க் டைம்ஸ்' ஊட­கம் பட்­டி­ய­லிட்­டுள்­ளது.

அன்றாட வேலை­களில் ஆசை

உங்­கள் அன்­றாட வேலை­களை தின­மும் ஒரு அர்த்­தத்­து­டன் செய்­வதன் மூலம் மன அழுத்­தத்தை போக்கிக்கொள்­ள­லாம். இதற்கு ஒரு எளிய வழிமுறையாக, சமை­ய­லறையை சுத்­தம் செய்­வது, வர­வேற்­பு அறையை அழ­கு­ப­டுத்­து­வது, தலை­யணை உறை­களைத் துவைத்து பயன்படுத்துவது போன்ற பிடித்த செயல்­களில் ஈடு­ப­ட­லாம். இத­னால், ஒரு திருப்தி­யான மன­நிலை ஏற்­படும். 10 நிமிட நேர சிறிய நடை­ப­யிற்சிக்குச் செல்வதும் ­நல்ல பலனைத் தரும்.

எந்த இடத்­தி­லும் தியா­னம்

"உங்­கள் மூளை ஒரு கணி­னி­யைப் போன்­றது. அது, ஒரு குறிப்­பிட்ட அளவு நினை­வாற்­றலை மட்­டுமே கொண்­டுள்­ளது," என்று கூறுகிறார் பிர­வுன் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மைண்ட்­ஃபுல்­னஸ் மையத்­தின் ஆராய்ச்சி, கண்­டு­பிடிப்புகளின் இயக்­கு­நர் டாக்­டர் ஜட்­சன் ப்ரூ­வர். "மனதை அமை­திப்­ப­டுத்­து­வ­தற்கு தியா­னம் செய்வது முக்கியம். இதை எந்த இடத்திலும் பழகலாம்," என்றும் அவர் கூறுகிறார்.

ஓய்வு முக்கியம்

உங்­கள் மூளைக்­கும் உட­லுக்­கும் ஓய்வு தேவைப்­பட்­டால், வேலை அல்­லது பள்­ளி­யி­லி­ருந்து விடுப்பு எடுத்­துக்கொண்டு ஓய்வு எடுப்பது முக்­கி­யம்.

எழுதி, கசக்கி வீசுங்கள்

நாள்­பட்ட தூக்­கமின்மை பிரச்சினை மன­நலப் பாதிப்­பு­களை எற்­ப­டுத்­தும். இது நோயெ­திர்ப்பு மண்­ட­லத்தை பல­வீ­னப்­ப­டுத்­தி, நினை­வாற்­றலை குறைக்கும். மனச்­சோர்­வையும் அதி­க­ரிக்கும்.

உங்­கள் மனதை தொந்­த­ரவு செய்­யும், தூக்­கத்­தைக் கெடுக்­கும் உங்­க­ளின் அனைத்து எண்­ணங்­க­ளை­யும் படுக்­கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்­திற்கு முன்பு ஒரு தாளில் எழுதி, பின்­னர் அதை கசக்கி வீசி விடுங்கள். இது­போல் செய்­வது உங்­கள் மனதை அமை­திப்­படுத்­தும் என்­கி­றார் தூக்­கம் குறித்து ஆலோசனைகளை வழங்கும் மருத்­து­வர் ஓ'கானர்.

சிரித்து மகிழுங்கள்

உங்­க­ளுக்குப் பிடித்த நகைச்சுவைக் காணொளிகள், திரைப்­ப­டங்­களைப் பார்ப்பது மனதை மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருக்க உத­வும். மனம் இறுக்­க­மாகத் தோன்­றும் நேரத்­தில் நல்ல மென்­மை­யான இசையைக் கேளுங்­கள். இசை கேட்­ப­தால் உங்­கள் மன இறுக்­கம் தளர்ந்து மனம் லேசா­கும்.

ஆதா­ரம்: நியூ­யார்க் டைம்ஸ்