கொரோனா கிருமிப் பரவல் சூழலில் பல நிறுவனங்கள் வீட்டி
லிருந்து பணியுரியும் முறைக்கு மாறிவிட்டன. இது ஒருவகையில் மக்களை வெளியே செல்லவிடாமல் நோய்த் தொற்றிலிருந்து காக்கும் என்றாலும், வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் போதுமான உடல் உழைப்புக் கிடைப்பதில்லை. இது ஒரே இடத்தில் முடக்கிவிடுவிடுகிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடலுக்கும் மனதுக்கும் சோர்வை ஏற்படுத்துகிறது.
மனமும் உடலும் உற்சாகமாக இருக்கவும் நலத்தோடு இருக்கவும் அன்றாடம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியமான ஒன்று. உடற்பயிற்சி உண்மையிலேயே மகிழ்ச்சியூட்டும் பொழுதுபோக்கு. அதைப் பழக்கத்துக்குக் கொண்டுவந்து விட்டால் போதும்.
சிங்கப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலர் வீட்டில் இருந்து வேலை செய்ததால் அல்லது படித்த தால் குறைவாகவே நகர்ந்துள்ளனர். இது இயல்பாகவே அவர்களின் உடல் செயல்பாட்டைப் பாதித்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகை உடல்நல ஆய்வு அறிக்கை சென்ற 2021ஆம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. இதன்படி, சிங்கப்பூரர்களின் ஒரு வார உடல் உழைப்பில் 49.6 விழுக்காடு போக்குவரத்திற்கே செல விடப்பட்டுள்ளது.
இதுபற்றிக் கூறும் பார்க்வே ஷென்டன்வே மருத்துவ குழுமத்தைச் சேர்ந்த டாக்டர் ஹோ வான் சின், ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்காமல் ஒருவர் அங்கு இங்கும் சென்று சுறுசுறுப்பாக இருப்பதற்கு 'ஃபிட்னஸ் டிரேக்கர்' முறையைக் கையாளும்படி அறிவுறுத்துகிறார்.
"ஒரே இடத்தில் நீங்கள் முடங்கிக் கிடக்கும் வாழ்க்கை முறையை நீங்கள் கடைப்பிடிப்பவராக இருந்தால், தொடக்கமாக எளிதில் செய்யக்கூடிய 5,000 அடி நடைப்பயிற்சியில் இறங்குங்கள். பின்னர் ஒவ்வொரு வாரமும் 1,000 அடிகளை கூட்டிக்கொண்டே செல்லுங்கள்," என்று கூறும் இவர் ஒருவர் குறைந்தது நாள் ஒன்றுக்கு 7,000 அடி நடந்தால் அவரின் வாழ்நாள் அதிகரிக்கும் என்று கூறுகிறார்.
இது தவிர, ஒருவர் வேறு வகையான எளிதான உடற்பயிற்சிகளிலும் பலன் பெறலாம். அதிலும் வீட்டுக்கு வெளியே செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே சில பயிற்சிகளை செய்யலாம்.
1. 'புஷ் அப்ஸ்'- இதை ஆண்களும், பெண்களும் என இருவருமே செய்யலாம். தொப்பையை குறைக்க உதவும். கைகளில் இருக்கும் தேவையற்ற சதையை கரைக்க உதவும். தரையில் பாதியளவில் படுத்தவாறு கைகளாலும் கால்களாலும் உடம்பை தாங்கிய நிலையில் இருங்கள். கைகளை தோள்களை விட சற்று அகலமாக வைத்திருங்கள். உங்கள் மார்பு கிட்டத்தட்ட தரையைத் தொடும்வரை உடலை கீழே இறக்கி பின் உடம்பை மேலே தள்ளுங்கள். இதை தொடர்ந்து செய்தல் உடல் நலனுக்கு நல்லது.
2. சிறிய பயிற்சிகளாக யோகா, ஆசனங்கள் செய்தல் ஆகியவை வீட்டிலேயே சிறிது நேரம் காலை மாலை இரு வேளையும் செய்யலாம். தியானப் பயிற்சிகள் மற்றும் யோகாசனப் பயிற்சிகள் செய்வது உடலின், மனதின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நலன் பயக்கும். இவற்றைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சி மையங்களுக்குச் சென்று முறையாக கற்றுக் கொள்வது கூடுதல் பலன் அளிக்கும்.
நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் தங்களுக்கு இயன்ற வகையான நடைப்பயிற்சியை தேர்வு செய்யலாம்.
மெதுவாக நடப்பது
இது எப்போதும் நடக்கும் சாதாரண வேகமில்லாத, சிரம மில்லாத நடையாகும்.
இந்த வகை நடைப்பயிற்சி உடல் வலி, சோர்வுகளைப் போக்கும். உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இளகு வாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். உடல் பருமன் உள்ள வர்களுக்கு ஏற்ற நடையாகும் இது.
வேக நடை
கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. இவ்வாறு வேகமாக நடப்பதால் உடம்பில் வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுறுசுறுப்பு அதிகமாகும்.
தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று நமது உடலுக்கும் மனதுக்கும் தன்னம் பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும்.
இந்த வேக நடைப்பயிற்சி நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடை யாகும்.
மெதுவோட்டம்
நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும். அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது.
அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வோர் அணுவையும் சுத்தம் செய்யும்.

