உடல்வாகுக்கேற்ற உடையழகு

உடல்வாகுக்கேற்ற உடையழகு

2 mins read
17a204f2-7471-447e-a7e3-3557521bd9bc
-
multi-img1 of 2

இன்­றைய சூழ­லில், பெண்­க­ளைக் கவ­ரும் ஆடை­களில் சுடி­தா­ருக்­கும் முக்­கிய பங்­குள்­ளது. பெண்­கள் தங்­க­ளது நிறத்­திற்கு ஏற்­றார்­போல் உடை­க­ளைத் தேர்வு செய்­வ­தைக் காட்­டி­லும், உடல்­வாகுக்கு ஏற்ற சுடி­தார்­களை எடுக்­க­வேண்­டும் என்று அறி­வுறுத்து­கின்­ற­னர் ஆடை வடி­வ­மைப்பு நிபு­ணர்­கள்.

தாங்­கள் எப்­போ­துமே அழ­காக இருக்­க­வேண்­டும் என்­ப­தில் அதிக ஆர்­வம் காட்­டும் பெண்­கள், தங்­க­ளுக்கு அதி­கம் பிடிக்­கும் நகை­கள், துணி­கள், அழகு சாத­னப் பொருட்­க­ளுக் கும் தயங்­கா­மல் அதி­கம் செலவு செய் கின்­ற­னர்.

தாங்­கள் தேர்ந்தெடுக்­கும் ஆடை­கள் புது வர­வா­க வும் புதிய வடி­ வ­மைப்­பு­ட­ன் இருக்­க­வும் பிரி­யப்­ப­டு­கின்­ற­னர்.

அவர்­க­ளது விருப்­பத்­துக்கு ஏற்­றாற்ே­பால், சந்­தை­களில் இப்­போது ஏகப்­பட்ட ரகங்­களில் சுடி­தார்­கள் குவிந்­துள்­ளன. அனார்­கலி, ஷார்ட், ஃப்ளேர்டு, ஸ்கின் ஃபிட், பதானி, பாட்­டி­யாலா, ட்ரௌ­ஸர் ஸ்டைல், பளாஸோ சுடி­தார் என இப்­படி சொல்­லிக்­கொண்டே போக­லாம்.

முத­லில் நாம் எடுக்­கும் சுடி­தார் நமது உடல்­வா­குக்கும் நமது நிறத்­துக்கும் ஒத்­து­வ­ருமா என பார்த்­த­பின்­னரே அதை வாங்கவேண்­டும் என்­கின்­ற­னர் ஆடை வடி­வ­மைப்­பாளர்­கள்.

கறுப்பு நிற­மாக உள்­ள­வர்­கள், 'லைட்' நிறத்­தில் உள்ள கற்­கள் வேலைப்­பா­டு­க­ளு­டன் கூடிய சுடி­தா­ரைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம். இளம் பச்சை, எலு­மிச்சை நிறத்­தில் உள்ள மஞ்­சள் நிறம், இள ஊதா, இள சந்­தன வண்­ணத்­தில் உள்ள சுடி­தார்­க­ளைத் தேர்வு செய்­யலாம்.

கொஞ்­சம் நல்ல நிறத்­து­டன் உள்­ள­வர்­களும் மாநி­ற­மாக உள்­ள­வர்­களும் மெரூன், இங்க் புளூ, ரோஜா(பிங்க்) நிறம், சாம்­பல் நிறத்தை தேர்ந்து எடுக்கலாம்.

நல்ல நிற­மாக உள்­ள­வர்­கள் அழுத்­த­மான நிறத்­தில் எந்த சுடி­தார் போட்­டா­லும் அழ­கா­கத் தெரி­யும். உடல் பரு­ம­னாக உள்­ள­வர்­கள் பருத்­தி­யா­லான சுடி­தார் அணிந்­தால் அது மேலும் பருமனாகத்­தான் காட்­டும். அதற்­குப் பதில், அவர்­கள் எளி­மை­யான சுடி­தார்­க­ளைப் போட்­டாலே அழ­கா­கத் தெரி­யும்.

ஒல்­லி­யாக உள்­ள­வர்­கள் கொஞ்­சம் அதிக வேலைப்­பாட்­டு­டன் கூடிய பருத்தி அல்­லது பட்­டுப் பருத்­தி­யால் ஆன சுடி­தா­ரைத் தேர்வு செய்­ய­லாம். அது அவர்­களை சற்று உடல் பரு­ம­னாகக் காட்­டும்.

முடிந்­த­வ­ரை­, சுடி­தார்­களை 'அம்­பர்லா' மாட­லில் அணிந்­தால் பார்ப்­பதற்கு பூக்­கள் விரிந்­தி­ருப்­பது போன்று அழ­கா­கத் தெரி­யும் என்­கின்­ற­னர் ஆடை வடி­வ­மைப்பு வல்லுநர்­கள்.

தினந்­தோ­றும் அணி­வ­தற்கு ஏற்­றவை பருத்­தி­யா­லான சுடி­தார்­கள்.

காட்­டன் சில்க் துணி­யா­னது மிக­வும் கவர்ச்­சி­யான தோற்­றத்தை தரும். இது­போன்ற சில்க் காட்­ட­னில் உடல்­வா­கிற்கு ஏற்­றாற்போல் தைத்து அணி­யப்­படும் சுடி­தார்­கள் பள­ப­ளப்­பா­க­வும் ஆடம்­ப­ர­மா­க­வும் கல்­யா­ணம், வர­வேற்­புக்கு அணிந்து செல்­லக்­கூ­டிய வகை­யில் மிக­வும் அற்­பு­த­மாக இருக்­கின்­றன.

இந்­தி­யா­வில் பஞ்­சாப் மாநி­லப் பெண்­க­ளின் பிரத்­தி­யேக மாடல் என்று ஷார்ட் சுடி­தார் வகை­யைச் சொல்­ல­லாம். ேமல்சட்டை முட்­டிக் கால்­க­ளுக்கு மேல் இருப்­பது போன்று தைக்­கப்­படும். கழுத்தைச் சுற்­றி­யும் வயி­று­வரை நீண்­டும் 'டிசைன்' செய்­யப்­பட்­டி­ருக்­கும். அதே போல் சட்ைடயின் கீழ்ப்­பு­றம் பட்­டை­யாக வடிவமைக்கப்பட்டி­ருக்­கும். இது பார்ப்­ப­தற்­கும் அணி­வ­தற்­கும் மிக­வும் ஏற்­ற­தாக இருக்­கும்.

படங்கள்: ஊடகம்