ஆ. விஷ்ணு வர்தினி
சிங்கப்பூர் கலை விழா 2022ஐ முன்னிட்டு சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம் அதன் குடிமை வட்டாரப் பங்காளிகளுடன் இணைந்து, 'லைட் டு நைட்' என்ற இரவு நேர ஒளியூட்டு விழாவை இம்மாதம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில், கண்கவர் காட்சியகங்களும் புதிய இருவழி தொடர்புடைய கலைப்படைப்புகளும் இடம்பெறவிருக்கின்றன.
"புதிய வழிகளில் நோக்குதல், சிந்தித்தல், இருத்தல்' என்ற கருப்பொருளில் அமைந்துள்ள இந்த ஆண்டின் இரவு நேர ஒளியூட்டு விழா, குடிமை வட்டாரத்துக்கு ஒளியூட்டி அழகு சேர்க்க உள்ளது.
'அக்யூட் ஆர்ட்' கலையகம் தயாரித்துள்ள இணைப்பு நிஜமாக்கக் கண்காட்சி, முக்கிய கட்டடங்களின் மேற்பரப்பில் காணப்படும் ஒளிக்காட்சிகள், கலைக்கூடத்தில் இடம்பெறும் நேரடி இசை உள்ளிட்ட சுவாரசியமான அங்கங்கள் இம்முறை இடம்பெறும்.
உள்ளூர், வெளியூர் கலைஞர்களின் பல்லுணர்வுத் தன்மை கொண்ட படைப்புகளை மக்கள் கண்டுகளிக்கலாம். சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் நடக்கவிருக்கும் 'லைட் டு நைட்' விழா காலையிலும் மாலையிலும் இம்முறை இடம்பெறவிருக்கின்றது. ஆக பிரம் மாண்டமான ஒளியூட்டு விழாவாக இவ்வாண்டின் விழா திகழும்.
படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

