நான் கொக்டேல் இனத்தைச் சேர்ந்த பறவை. என் பெயர் தண்டர். நான் நன்றாகப் பாடுவேன். என்னுடைய அம்மா உமா எனக்கு 'குக்கூ குக்கூ' என்ற பாடலைக் கற்றுக் கொடுத்தார். அந்தப் பாடல் மூலம்தான் தொலைந்துபோன நான் மீண்டும் என் வீட்டிற்கு வந்தேன்.
நான் நான்கு மாத குழந்தையாக இருந்தபோது 2021 ஜூலை மாதம் என் அம்மா என்னைக் கடையில் இருந்து வாங்கி வந்தார். அம்மாவுக்கு இரண்டு பிள்ளைகள். நான் அவருக்குச் செல்லப்பிள்ளை.
கொக்டேல் பறவைகளுக்கு இசை என்றால் மிகவும் விருப்பம். நான் நன்றாக விசில் அடிப்பேன். அம்மா எனக்கு 'குக்கூ குக்கூ' என்ற பாடலைச் சொல்லிக் கொடுத்தார். நானும் அந்தப் பாடலை விசில் அடிப்பேன். எல்லாரும் என்னைப் பாராட்டுவார்கள்.
என் இறக்கைகள் அழகாக இருப்பதாலும் என்னால் பறக்க முடியாமல் போய்விடும் என்ற கவலையாலும் அம்மா இறக்கைகளை வெட்டாமல் வைத்திருந்தார். அதுவே எனக்கு தீங்காகிப் போனது. அன்றைக்கு வீட்டில் யாரோ மேசையை வேகமாக இழுத்தார்கள். அந்தச் சத்தத்தைக் கேட்டு பயந்துபோன நான், திறந்திருந்த சன்னல் கதவு வழியாக பறக்கத் தொடங்கினேன்....
பறந்து பறந்து நான் களைத்துப் போனேன். எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. ஓர் அடுக்குமாடியின் தரைத் தளத்தின் சென்று அமர்ந்தேன். அடடா! தவறு செய்து விட்டோம். சத்தம் கேட்டதால் பயந்துவிட்டோமே! வீட்டில் அம்மா, அப்பா, அண்ணன்கள் எல்லாரும் என்னைக் காணவில்லை என்று தேடுவார்களே! என்ன செய்வது? என்று கண்ணை மூடி உட்கார்ந்து இருந்தேன்.
அங்கே வந்த ஒரு பாட்டி, என்னை ஓர் அட்டைப் பெட்டிக்குள் வைத்து அவருடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அவர் எனக்கு உணவு அளித்தார். ஆனால், வீட்டை விட்டு வந்ததை நினைத்து கவலையுடன் சாப்பிட விருப்பம் இல்லாமல் இருந்தேன்.
நான் சாப்பிடாததால் அந்தப் பாட்டி கவலை அடைந்தார். என்னை எப்படிப் பராமரிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. அப்போது புளோக் 461ல் ஒரு வீட்டில் நிறைய பறவைகளை வளர்க்கிறார்கள் என்பதை அவர் அறிந்தார். என்னை அந்த வீட்டில் திரு ஜகந்நாதனிடம் ஒப்படைத்தார்..
20-01-2022
என்னைப்போல பல பறவைகள் அந்த வீட்டில் இருந்தன. எல்லாரும் என்னுடன் பேசினார்க்ள. ஆனால், என் குடும்பத்தை விட்டு வந்த சோகத்தில் நான்கு நாட்கள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
பாட்டால் கிடைத்த கிளியின் கதை
ஜூரோங் ஸ்திரீட் 41 புளோக் 424ல் வசிக்கும் திருமதி உமா வீட்டில் வளரும் கிளி ஒருநாள் காணாமல் போய்விட்டது. வழி தெரியாமல் தவித்த அந்தக் கிளியை அப்பகுதியைச் சுத்தம் செய்யும் மாது காப்பாற்றினார். புளோக் 461ல் பறவைகளைப் பற்றி அறிந்த திரு ஜெகந்நாதனிடம் அந்தக் கிளியைக் கொடுத்தார். அந்தக் கிளி தமிழில் பாடியதால் அது தமிழ்க் கிளி என்பதை அறிந்தார் திரு ஜெகந்நாதன். உமா அடுக்குமாடித் தளங்களில் ஒட்டி இருந்த சுவரொட்டியைப் பார்த்து தொடர்புகொண்டு கிளியை ஒப்படைத்தார்.
என்னைக் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 600 வெள்ளி சன்மானம் வழங்கப்படும் என்று என் அம்மா பலர் கூடும் இடங்களில் சுவரொட்டி ஒட்டி வைத்திருந்தார். அதைப் பார்த்த திரு ஜகந்நாதன் குடும்பத்தினர் என் அப்பாவைத் தொடர்புகொண்டனர். என் அப்பா, அம்மா எல்லாரும் என்னைத் தேடி வந்தார்கள். அவர்களின் குரலைக் கேட்டதும் நான் 'குக்கூ... குக்கூ...' என்று பாடினேன். என் அம்மா மகிழ்ச்சியோடு என்னைத் தூக்கிக் கொஞ்சினார். என்னைப் பார்த்துக் கொண்டவர்களும் என்னைக் கண்டெடுத்த பாட்டியும் மிகவும் நல்லவர்கள். அனைவருக்கும் என் மொழியில் 'குக்கூ குக்கூ' என்று நன்றி கூறிவிட்டு என் குடும்பத்துடன் என் வீட்டுக்குத் திரும்பினேன்.
சிறுவர்களே! நீங்களும் எங்கு சென்றாலும் பெற்றோரின் கையைப் பிடித்துச் செல்லுங்கள்.
பெற்றோர் கண்டிப்பது பிள்ளைகளின் நன்மைக்கே. பெற்றோரே நமக்குப் பாதுகாப்பு. ஆபத்துகளில் இருந்தும் தீயவற்றில் இருந்தும் நம்மைப் பாதுகாப்பவர்கள் பெற்றோரே.
எனக்கு அம்மா ஞாபகமாகவே இருந்தது. அம்மாவுக்கு பிடித்த 'குக்கூ குக்கூ' பாட்டைப் பாடினேன். நான் தமிழ் பாட்டுப் பாடுவதைக் கேட்ட அந்தக் குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். நான் தமிழ்க் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் அறிந்தார்கள். அவர்கள் என் குடும்பத்தைத் தேடத் தொடங்கினார்கள்.

