உமாவின் விடாமுயற்சி

உமாவின் விடாமுயற்சி

1 mins read

'தண்டர்' காணாமல்போய் ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. இனி கிடைக்காது என்று குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் சொல்லியும் விடாமுயற்சியுடன், என் பிள்ளை காணாமல் போனால் சும்மா இருக்க முடியுமா? என்று நினைத்துக்கொண்டு தேடினேன். நான் லிஷாவில் செயலாளராக இருக்கிறேன். எங்கள் குழு உறுப்பினர் மேடம் நிர்மலாவைத் தொடர்பு கொண்டேன். அவர் விலங்கு ஆர்வலர் என்பதால் அவருடைய வட்டத்தில் இருக்கும் விலங்கு ஆர்வலர்களுக்கு தண்டரின் படத்துடன் அதைத் திரும்ப கொடுப்பவர்களுக்கு 600 வெள்ளி சன்மானம் என்று அச்சடித்த விளம்பரத்தை அனுப்பி வைத்து உதவி செய்தார்கள். அவரைப்போல தண்டரைப் பார்த்துக்கொண்ட திரு ஜெகந்நாதன், தண்டரைப் பத்திரமாக எடுத்துச் சென்று பாதுகாத்த துப்புரவு பணியாளர் அம்மா ஆகியோரின் உதவியால் என் செல்லப் பிள்ளை என்னிடம் வந்து சேர்ந்தது.