வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் 2003 முதல் சேவை வழங்கி வரும் 25 தொடக்ககால கால அல்ஸ்டோம் ரயில்கள்,
2018ஆம் ஆண்டில் இடைக்கால மேம்பாட்டுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டன. அந்த ரயில்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படுகின்றன, என்னென்ன புதிய வசதிகளைப் பயணிகள் எதிர்பார்க்கலாம் என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆராய்ந்தது.
ரயில் வண்டியில் அடித்தளம் அமைப்பதற்கு முன், தரை முதலில் சமமாக்கப்படும்.
செங்காங் கிடங்கில் ஒவ்வொரு ரயிலாகப் புதுப்பிக்கப்படுகிறது. முதலில் ஒவ்வொரு ரயிலின் வண்டிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்படும். பிறகு, வண்டிகளின் உள்ளே இருப்பவை அனைத்தும் அகற்றப்படும்.
மின்சார இயக்கம் சோதிக்கப்பட்டு, தேவைப்பட்டால் பழுதுபார்க்கப்படும். தேய்ந்துபோன
பாகங்கள் சீரமைக்கப்படும். ஏறுவழியில் புதுச்சாயம் அடிக்கப்படும்.
புதுப்பிப்புப் பணி முடிவடைந்தவுடன், ரயில் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
தண்ணீர் இறுக்கச் சோதனை, நிலை பாரச் சோதனை இதில் உள்ளடங்கும்.
ரயிலின் உட்புறத்தில் புதிய குளிர்சாதனக் குழாய்களும் புதிய இருக்கைகளும் புதிய தகடுகளும் பொருத்தப்படும்.

