புதிய அம்சங்கள்

புதிய அம்சங்கள்

1 mins read

புதுப்பிக்கப்பட்ட ரயிலால் தற்போதைய ரயில் இயக்க முறையுடன் செயல்பட முடிவதை உறுதிப்படுத்த மேலும் பல சோதனைகள் செய்யப்படும். முடிவில், ரயிலில் அடையாள, வழிகாட்டி வில்லைகள் ஒட்டப்படும். மறுபடியும் சேவை வழங்குவதற்கு ரயில் தயாராகிவிட்டது.

புதிய பாதை வரைபடத்தில் ரயிலின் பயண விவரங்களை உடனுக்குடன் காணலாம். கதவுகள் எந்தப் பக்கம் திறக்கும் என்பதையும் வரைபடம் காட்டும்.

ரயிலின் ஒவ்வொரு முனையிலும் ஒரு காட்சித் திரை உள்ளது. ரயிலின் இயக்கப் பராமரிப்பு ஊழியர்கள் அதைப் பயன்படுத்தி குறைபாடு களை எளிதில் அடையாளம் காணலாம். புதிய கண்காணிப்பு முறையின் ஒரு பகுதி இது.

புதுப்பிக்கப்பட்ட ரயிலில் புதிய இருக்கைகள், புதிய தரை, அதிக சக்திமிக்க குளிர்சாதன வசதி ஆகியவை இருக்கும். பழைய புளோரசன்ட் விளக்குகளுக்கு அகற்றப்பட்டு LED குமிழ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. நிற்பதற்கு அதிக இடமளிக்க, ரயிலின் ஆறு வண்டிகளில் நான்கில் சாய்வு இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளன.