சில தகவல்கள்

சில தகவல்கள்

1 mins read

சிங்கப்பூரில் தற்போது மொத்தம் 122 ரயில் நிலையங்கள் உள்ளன.

ஆறு வேவ்வேறு தடங்களில் மொத்தம் 216 கி.மீட்டர் வரை ரயில் தடங்கள் உள்ளன.

டோபி காட் எம்ஆர்டி நிலையம் மிகப்பெரிய நிலத்தடி ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தை வேலை நேரத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏறக்குறைய 20,000 பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

ரயில் நிலையங்களில் 41.3 மீட்டர் நீளத்திற்கு நகரும் படிக்கட்டுகளை பிராஸ் பாசா நிலையம் கொண்டுள்ளது.

கிழக்கு -மேற்கு ரயில் தடம் பாசிர் ரிஸ்ஸில் தொடங்கி துவாஸ் லிங்க் வரை செல்லக்கூடியதாக உள்ளது.

நில மட்டத்திலிருந்து 43 மீட்டர் கீழே பென்கூலன் ரயில் நிலையம் உள்ளது. இதுவே ஆக அடியில் இருக்கும் நிலையமாகும்.

கிழக்கு -மேற்கு ரயில் தடம் மிக வேகமாகச் செல்லக்கூடிய ரயில் தடமாகும்.

2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, சிங்கப்பூர் அரசாங்கம் பெரு விரைவு நிலையங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்தியது. அபாயகரமான பொருட்களை மறைக்க ஏதுவான அஞ்சல் பெட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டன. குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. பல கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டன.