சுதந்திரம் பெற்ற பிறகு சிங்கப்பூர் பேருந்து சேவைகளை மட்டும் நம்பி இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தது.
அதன்படி 1967ல் ரயில் கட்டமைப்பை அமைக்க நிலப் போக்குவரத்து வாரியம் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கி நவம்பர் 7, 1987ல் இயோ சூ காங், தோ பாயோ இடையே முதல் ரயில் சேவை இடம்பெற்றது.
வடக்கு - தெற்கு வழித்தடத்தில் ஐந்து நிலையங்களுடன் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு மேலும் 15 நிலையங்கள் செயல்படத் தொடங்கின.
எதிர்பார்த்ததைவிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1990ஆம் ஆண்டு 21 நிலையங்களுடன் ரயில் சேவை விரிவுபடுத்தப் பட்டது.
2015 முதல் 2020 வரை சராசரியாக ஒரு நாளைக்கு ஏறக்குறைய 2.2 மில்லியன் பயணிகள் பெரு விரைவு ரயிலைப் பயன்படுத்துகின்றனர்.

