'எங்கும் திறமைதான் முக்கியம்'

'எங்கும் திறமைதான் முக்கியம்'

3 mins read

பிர­ப­லங்­க­ளின் வாரி­சாக இருப்­ப­தால் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­வது எளி­தாக இருக்­குமே தவிர, பெரிய வளர்ச்­சி­யைக் கொடுத்து­வி­டாது என்­கி­றார் கல்­யாணி பிரி­ய­தர்­ஷன் (படம்).

வாரிசு என்ற தகுதி தொடர்ந்து வாய்ப்­பு­க­ளைப் பெற்­றுத் தராது என்­றும் ரசி­கர்­கள் மன­தில் இடம்­பி­டித்­தால் மட்­டுமே திரை­யு­ல­கில் நீடிக்க இய­லும் என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மலை­யா­ளத்­தில் கல்­யாணி நடித்­துள்ள 'ஹிரு­த­யம்' படத்­துக்கு தென்­னிந்­தியா முழு­வ­தும் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இப்­போது மலை­யா­ளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழி­க­ளி­லும் இவ­ருக்கு வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன.

தமி­ழில் சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் 'ஹீரோ', சிம்­பு­வு­டன் 'மாநாடு' என பெரிய நாய­கர்­க­ளு­டன் இணைந்து நடித்­தி­ருந்­தா­லும் கல்­யா­ணிக்கு சொல்­லிக்­கொள்­ளும்­படி­யான கதா­பாத்­தி­ரங்­கள் இன்­னும் அமை­ய­வில்லை. ஆனால் அது­கு­றித்து தாம் கவ­லைப்­ப­ட­வில்லை என்­றும் எதற்­கா­க­வும் தாம் அவ­ச­ரப்­ப­ட­வில்லை என்­றும் பக்­கு­வ­மா­கப் பேசு­கி­றார்.

"இரண்டு பேருமே திற­மை­யான, முன்­ன­ணி­யில் உள்ள நடி­கர்­கள். அவர்­க­ளு­டன் நான் நடித்த படங்­கள், நாய­கனை மைய­மாக வைத்து உரு­வா­னவை. எனி­னும் அந்த இரண்டு படங்­க­ளின் கதை­யைக் கேட்­ட­தும் இந்­தப் படங்­களில் நான் இருக்க வேண்­டும் என்று விரும்­பி­னேன். அதைச் செயல்­ப­டுத்தி உள்­ளேன்.

"இன்று தமிழ் ரசி­கர்­க­ளுக்கு என்­னைத் தெரி­கிறது என்­றால், அதற்கு சிவா­வும் சிம்­பு­வும்­தான் கார­ணம்," என்­கி­றார் கல்­யாணி.

இயக்­கு­நர் பிரி­ய­தர்­ஷன், நடிகை லிசி தம்­ப­தி­ய­ரின் மகள் என்­ப­தால் மலை­யா­ள திரை­யு­ல­கில் கல்­யாணி எப்­போ­துமே செல்­லப் பிள்­ளை­தான். அங்கு அவ­ருக்­கான வாய்ப்­பு­களும் அதி­கம் கிடைத்து வரு­கின்­றன. எனி­னும் தமிழ், தெலுங்­கி­லும் சாதிக்க விரும்­பு­கி­றா­ராம்.

"மலை­யாள திரை­யு­ல­கைப் பொறுத்­த­வரை திறமை உள்­ளதா, கதா­பாத்­தி­ரத்­துக்­குப் பொருத்­த­மாக இருப்­பாரா என்­ப­தற்­குத்­தான் முன்­னு­ரிமை கொடுப்­பார்­கள். சிபா­ரி­சு­கள், பெற்­றோ­ருக்கு உள்ள செல்­வாக்கு ஆகி­ய­வற்றை எல்­லாம் கண்­டு­கொள்­வதே இல்லை.

"அப்­பா­வுக்­கும் அம்­மா­வுக்­கும் அங்கு நண்­பர்­கள் அதி­கம் என்­பது உண்­மை­தான். அதன் கார­ண­மாக இரு­வ­ரை­யும் நன்கு அறிந்த மூத்த நடி­கர்­க­ளு­டன் நடிக்­கும்­போது என்­னி­டம் கூடு­த­லாக அன்பு பாராட்­டு­வார்­கள். நன்­றா­கக் கவ­னித்­துக்கொள்­வார்­கள்.

"இந்­தப் பாச­மும் பாது­காப்­பும் முதல் தலை­முறை நடி­கர்­க­ளுக்கு கிடைக்­காது என்­பதை ஏற்­றுக்­கொள்­கி­றேன். மற்­ற­படி, திறமை இருந்­தால்­தான் திரை­யு­ல­கில் சாதிக்க முடி­யும். எல்லா மொழி­யி­லும் இது­தான் நிலைமை," என்று சொல்­லும் கல்­யாணி, உடற்­பயிற்­சி­தான் தனது கட்­டு­ட­லுக்­குக் கார­ணம் என்­கி­றார்.

சினி­மா­வில் நடிக்­கும் முன்பு இவ­ரும் உடல் பெருத்­துத்­தான் இருந்­தா­ராம். ஆனால் நடி­கை­யா­க­லாம் என்று முடிவு செய்­த­தும், இனிப்­பு­கள் சாப்­பி­டு­வது, ஐஸ்­கி­ரீம் சுவைப்­பது உள்­ளிட்ட பல விஷ­யங்­களை தியா­கம் செய்­துள்­ளார். அதன் பல­னாக ஒரே ஆண்­டில் ஏழெட்டு கிலோ எடை குறைந்து இப்­போது 49 கிலோ மட்­டுமே உள்­ளார்.

"வாரிசு நடிகை என்று முத்­திரை குத்­தப்­ப­டு­வது குறித்து நான் கவ­லைப்­பட்­டது கிடை­யாது. அதே­ச­ம­யம் ரசி­கர்­கள் என்­னைப் பற்­றிய சில உண்­மை­களைத் தெரிந்து­கொள்ள வேண்­டும் என விரும்­பு­கி­றேன்.

"பள்­ளிப்­ப­டிப்பை முடித்­த­பி­றகு அப்­பா­வின் படங்­க­ளி­லும் சில இந்­திப் படங்­க­ளி­லும், தமி­ழில் 'இரு­மு­கன்' படத்­தி­லும் தயா­ரிப்­புத் துறை­யில் வேலை பார்த்த அனு­ப­வம் உண்டு. மேலும் சில படங்­களில் கலைத்­துறை உத­வி­யா­ள­ரா­க­வும் பணி­யாற்றி உள்­ளேன். இப்­ப­டிச் சொந்த முயற்­சி­யில் சில அனு­ப­வங்­க­ளைப் பெற்ற பிறகே நடிகை ஆனேன்," என்­கி­றார் கல்­யாணி பி­ரி­ய­தர்­ஷன்.