அஜித்தும் விஜய்யும் நேரில் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியான நிலையில், இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் கடந்த இரு தினங்களாக இருவரது ரசிகர்களும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அடுத்த மாதம் விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படம் வெளியாகிறது. இதனால் அவரது ரசிகர்கள் அந்தப் படம் குறித்த பல்வேறு தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் அஜித் ரசிகர்களும் 'வலிமை' படம் குறித்து பதிவிட, வார்த்தைப் போர் தொடங்கியது. இப்போது இருவரது புகைப்படங்களையும் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போன்ற பதிவுகளையும் சமூக ஊடங்களில் வெளியிட்டுள்ளனர்.
இப்படி இரு தரப்பினரும் வரம்பு மீறி மோதிக்கொள்வதை அடுத்து, அஜித்தும் விஜய்யும் தங்கள் ரசிகர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பொதுவானவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

