நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணியின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. அப்போது எடுக்கப் பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஆதி.
"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். இப்போது அதிகாரபூர்வமாக நிச்சயம் செய்து கொண்டுள்ளோம்.
"24.3.22 என்ற நாள் எங்கள் இருவருக்கும் மிகவும் முக்கியமானது. இரு வீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எங்களின் புதிய பயணத்தில் உங்கள் அன்பு, ஆசிர்வாதம் தேவை," என்று இருவரும் சமூக ஊடகங்கள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழில் 'மிருகம்', 'ஈரம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஆதி, 'யாகவாராயினும் நா காக்க', 'மரகத நாணயம்' உள்ளிட்ட படங்களில் நிக்கி கல்ராணியுடன் சேர்ந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தற்போது லிங்குசாமி இயக்கும் 'வாரியர்' படத்தில் வில்லனாகவும் ஹன்சிகா, யோகிபாபு, ரோபோ சங்கருடன் 'பார்ட்னர்' என்ற நகைச்சுவைப் படத்திலும் நடித்து வருகிறார் ஆதி.
, :

