பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

2 mins read
205a7821-b916-4c52-b347-00a17a5cf270
டெல்லியில் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்தபோது தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவரித்தார். இந்தச் சந்திப்பு சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்தது. படம்: ஊடகம் -

தமிழக நலனுக்காக 14 கோரிக்கைகளுடன் மனு அளித்தார்

புது­டெல்லி: நான்கு நாள் பய­ண­மாக டெல்லி சென்­றுள்ள தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று பிர­த­மர் மோடியைச் சந்­தித்­துப் பேசி­னார்.

அப்­போது தமி­ழ­கம், தமி­ழர்­கள் தொடர்­பாக 14 முக்­கி­யக் கோரிக்­கை­களை முதல்­வர் ஸ்டா­லின் பிர­த­ம­ரி­டம் முன்­வைத்­த­தாக தமி­ழக அர­சின் செய்­திக்­கு­றிப்பு தெரி­விக்­கிறது.

பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பு சுமார் 30 நிமி­டங்­கள் நீடித்­தது.

தமி­ழ­கத்­தின் வளர்ச்­சித் திட்­டங்­கள், தமி­ழக மக்­க­ளின் நலன் சார்ந்த பல்­வேறு கோரிக்­கை­கள் அடங்­கிய மனுவை பிர­த­ம­ரி­டம் வழங்­கி­னார் முதல்­வர்.

காவி­ரி­யின் குறுக்கே மேக­தாது அணை­யைக் கட்­டும் கர்­நா­டக அரசு திட்­டத்­துக்கு மத்­திய அரசு அனு­மதி வழங்­கக் கூடாது என வலி­யு­றுத்தி உள்ள முதல்­வர் ஸ்டா­லின், பாக் வளை­கு­டா­வில் இந்­திய மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­க­ளை­யும் மீன­வர்­க­ளின் பாது­காப்­பை­யும் மத்­திய அரசு உறுதி செய்ய வேண்­டும் எனக் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

மேலும், கச்­சத்­தீவை மீட்­பது தொடர்­பான கோரிக்­கை­யும் அவ­ரது மனு­வில் இடம்­பெற்­றுள்­ளது.

இலங்­கை­யில் நில­வும் பொரு­ளா­தார நெருக்­கடி நிலை­யின் கார­ண­மாக அல்­ல­லு­றும் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள், உயிர் காக்­கும் மருந்­து­களை தமி­ழக அர­சின் சார்­பில் வழங்­கு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் ஈழத் தமி­ழர்­க­ளுக்கு சம உரிமை, அர­சி­யல் உரி­மை­க­ளைப் பெற்­றுத்­தர வேண்­டும் என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மேலும், தமி­ழ­கத்­துக்குத் தர வேண்­டிய நிதி நிலு­வைத் தொகையை மத்­திய அரசு உட­ன­டி­யா­கத் தர வேண்­டும் என்று கோரிக்கை விடுத்த அவர், மழை, வெள்­ளம், மாநில அர­சின் திட்­டங்­க­ளுக்­கான நிதி­யை­யும் தாம­தம் இல்­லா­மல் தர வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

உக்­ரேனில் பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளின் படிப்பு தடை­பட்ட நிலை­யி­லி­ருந்து இந்­தி­யா­வில் உள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் படிப்­பைத் தொடர்­வ­தற்­கான வழி­முறை­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும் என்­ப­தும் முதல்­வ­ரின் கோரிக்­கைப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளது.

தேசிய கல்விக் கொள்கை -2020 என்­பது மாநில சுயாட்­சிக்கே எதி­ரா­னது என்­றும் அதில் இடம்­பெற்­றுள்ள பல்­வேறு அம்­சங்­களும் தமி­ழக மாண­வர்­கள் நல­னுக்கு எதி­ரா­னது என்­ப­தால், அந்­தக் கொள்கை விலக்­கிக்­கொள்­ளப்­பட வேண்­டும் என்­றும் ஸ்டா­லின் வலி­யு­றுத்தி உள்­ளார்.

நீட் தேர்­வால் கிரா­மப்­புற ஏழை மாணவ, மாண­வி­யர் பாதிக்­கப்­படுவது குறித்­தும் முதல்­வர் தமது மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

முன்­ன­தாக, டெல்லி நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்­தி­யையும் அவர் சந்­தித்­தார். முதல்­வர் வேறு சில கட்­சித் தலை­வர்­க­ளை­யும் சந்­தித்துப் பேச ஏற்­பா­டு­கள் நடந்து வரு­வ­தா­க­வும் இது தேசிய அர­சி­ய­லில் தமி­ழக முதல்­வ­ருக்கு உள்ள முக்­கி­யத்­து­வத்தை பிர­தி­ப­லிப்­ப­தாக அமைந்­துள்­ளது என்­றும் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் பேட்டி

பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்­புக்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், தாம் முன்­வைத்த கோரிக்­கை­களை பிர­த­மர் பொறு­மை­யு­டன் கேட்­டுக்­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார். இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்கு உணவு, மருந்து வழங்க அனு­மதி கோரி­யுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.