டெல்லியில் ரஷ்ய அமைச்சர்: அதற்கு முன்பே பேசிய அமெரிக்க அமைச்சர்

டெல்லியில் ரஷ்ய அமைச்சர்: அதற்கு முன்பே பேசிய அமெரிக்க அமைச்சர்

1 mins read

புது­டெல்லி: உக்­ரேன் மீது ரஷ்ய துருப்­பு­கள் தொடர் தாக்­கு­த­லில் நடத்தி வரும் நிலை­யில், ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர் புது­டெல்­லிக்கு இரண்டு நாள் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­வது உலக நாடு­க­ளின் கவ­னத்தை இந்­தியா மீது திருப்­பி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், ரஷ்­யா­வி­டம் இருந்து குறைந்த விலை­யில் கச்சா எண்­ணெய்யை இந்­தியா இறக்­கு­மதி செய்­வ­தற்கு அமெ­ரிக்கா மீண்­டும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

சீனா­வில் இரண்டு நாள்­கள் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்ட ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர் செர்ஜி லாவ்­ரோவ், தமது பய­ணத்­தின்­போது பல்­வேறு உலக விவ­கா­ரங்­கள் குறித்து இந்­திய தரப்­பு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வார் எனத் தெரி­கிறது.

உக்­ரேன் மீதான தாக்­கு­த­லுக்­காக ரஷ்­யா­வுக்கு கண்­ட­னம் தெரி­விக்­காத நாடு­களில் ஒன்­றாக இந்­தி­யா­வும் கரு­தப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் புதன்­கி­ழமை இரவு அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­க­னு­டன் தொலை­பேசி வழி உரை­யா­டிய தக­வ­லும் தற்­போது வெளி­யாகி உள்­ளது. இரு­வ­ரும் இந்தோ-பசி­பிக் வட்­டார நிலைமை குறித்­தும் உக்­ரேன் நெருக்­கடி பற்­றி­யும் விவா­தித்­த­தா­கத் தெரி­கிறது. இது குறித்து தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்ள அமைச்­சர் ஜெய்­சங்­கர், இந்த உரை­யா­டல் பய­னுள்­ள­தாக அமைந்­தது எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்­பின் முன்­னேற்­றத்தை மதிப்­பாய்வு செய்­தோம். இந்தோ-பசி­பிக், உக்­ரேன், உல­கப் பொரு­ளி­யல் தொடர்­பான முன்­னேற்­றங்­கள் குறித்து விவா­திக்­கப்­பட்­டது," என்று ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.