இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை

இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை

1 mins read

போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷாஹின் என்ற பெண்ணுக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரசவத்துக்குப் பின்னர் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் இத்தகைய குறைபாடு மருத்துவத் துறையில் 'டைசெஃபலிக் பேராபேகஸ்' என்று குறிப்பிடப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

"இதுபோன்ற பிரச்சினைகளுடன் பிறந்த குழந்தை பிழைக்கும் என்பது நிச்சயமற்றது. இக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது குறித்து இதுவரை திட்டமிடவில்லை," என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஷாஹினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.