தளரா ஊக்கம், தீர்ந்தது ஏக்கம்

தளரா ஊக்கம், தீர்ந்தது ஏக்கம்

2 mins read
28760dc9-7466-49af-bd9f-e6fab7b8a897
தங்கம் கைகூடிய மகிழ்ச்சியில் சிங்கப்பூர் கொடியுடன் களத்தை வலம் வந்தார் நூருல் சுகாய்லா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஹனோய்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் தொடர்ந்து மூன்று முறை வெண்­க­லம் வென்று ஆறு­த­ல­டைந்த நிலை­யில், எட்­டாக்­க­னி­யாக விளங்­கிய தங்­கப் பதக்­கத்தை இம்­முறை கெட்­டி­யா­கப் பற்­றிக்­கொண்­டார் சீலாட் தற்­காப்பு விளை­யாட்­டா­ள­ரான சிங்­கப்­பூ­ரின் நூருல் சுகாய்லா.

பெண்­க­ளுக்­கான 'கிளாஸ் இ' 65-70 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்­டி­யில் நூருல் 30-22 என்ற புள்­ளிக் கணக்­கில் மலே­சி­யா­வின் சித்தி ஷாஸ்­வா­னாவை நேற்று தோற்­க­டித்­தார்.

தளரா முயற்­சிக்­குப்­பின் தங்­கம் கைசேர்ந்த மகிழ்ச்­சி­யில் ஆனந்­தக் கண்­ணீர் வடித்த நூருல், "என்­னால் சாதிக்க முடி­யுமா எனப் பல ஆண்­டு­க­ளாக என்­மீது நானே ஐயம் கொண்­டி­ருந்­தேன்.

"சீலாட்­டிற்­கா­கக் குடும்­பத்­தைப் பிரிந்து அதிக நேரம் செல­விட்­டேன். அத­னால் இம்­முறை என் பெற்­றோ­ருக்­குப் பெருமை தேடித் தர­வும் பிரிந்திருந்த அந்த நேரம் மதிப்­புக்­கு­ரி­யது என்­பதை அவர்­களுக்கு உணர்த்­த­வும் விரும்­பி­னேன்," என்­றார் 27 வய­தான நூருல்.

ஆட­வ­ருக்­கான 'கிளாஸ் சி' பிரி­வில் சிங்­கப்­பூ­ரின் ஹஸிம் யுஸ்லி தங்­கப் பதக்­கம் வென்­றார்.

இறு­திப் போட்­டி­யில் இந்­தோ­னீசி­யா­வின் யாசர் அரா­ஃபா­வு­டன் மோதி­னார் யுஸ்லி. போட்டி முடிய 28 நொடி­களே இருந்­த­போது 21-21 என்ற சம­நிலை காணப்­பட்­டது. அப்­போது, விதி­மு­றை­க­ளுக்­குப் புறம்­பான வகை­யில் உதைத்­த­தால் இந்­தோ­னீ­சிய வீரர் தகு­தி­நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

'கிளாஸ் எஃப்' பிரி­வில் அப்­துல் ரசாக் அப்­துல் ரஷீத் வெள்­ளிப் பதக்­கம் வென்­றார். இறு­திப் போட்­டி­யில் அவர் வியட்­னா­மின் டான் தின் நாமி­டம் 42-14 என்ற புள்­ளிக் கணக்­கில் தோற்­றுப்­போ­னார்.

பிரதமர் லீ சியன் லூங் பாராட்டு

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வென்று, பல சாதனைகளைத் தகர்த்துவரும் சிங்கப்பூர் போட்டியாளர்களுக்குப் பிரதமர் லீ சியன் லூங் பாராட்டு தெரிவித்து உள்ளார். "ஹனோயில் நமது விளையாட்டாளர்கள் மின்னிவருவது மகிழ்ச்சி தருகிறது. தென்கிழக்கு ஆசிய அளவிலும் தேசிய அளவிலும் தனிப்பட்ட வகையிலும் நம் போட்டியாளர்கள் சாதனைகள் பல படைத்துள்ளனர். நீச்சலில் குவா சகோதர, சகோதரிகள் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று தந்துள்ளனர். தொடர்ந்து முயலுங்கள், இறுதிவரை போராடுங்கள்! சிங்கப்பூரே உங்கள் பின்னால் நிற்கிறது," என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்

துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் முதல் நாளான நேற்று சிங்கப்பூர் குழு தடுமாறியது. பத்து மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் மகளிர் குழு வெண்கலம் வென்றது ஆறுதலாக அமைந்தது.

கட்டழகு வீரர்கள் தகுதிநீக்கம்

ஊக்கமருந்துத் தடுப்பு விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, தகுதிநீக்கம் செய்யப் பட்டதால் பிலிப்பீன்ஸ் கட்டழகுப் போட்டியாளர்கள் மனமுடைந்துபோயினர். மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே அவர்கள் ஊக்கமருந்துச் சோதனைகளைச் செய்ததற்கான ஆவணங்களை பிலிப்பீன்ஸ் வழங்கவில்லை எனக் கூறப்பட்டது. இதனையடுத்து, பதக்கத்திற்காகப் போட்டியிட இருந்த நிலையில், ஆண்கள் எண்மரும் பெண் ஒருவரும் அடங்கிய பிலிப்பீன்ஸ் கட்டழகுக் குழு ஏமாற்றத்துடன் நாடு திரும்ப வேண்டியதாயிற்று.