கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 13ஆம் இடத்தில் முடித்த சிங்கப்பூரின் செரின் டான், இம்முறை எழுச்சி பெற்று தங்கத்தை மீண்டும் தனதாக்கினார். 2017ஆம் ஆண்டு வெற்றியாளரான டான், மொத்தம் 1,442 ஊசிகளை வீழ்த்தினார். சக சிங்கப்பூரரும் நடப்பு வெற்றியாளருமான நியூ ஹுய் ஃபென் 1,319 ஊசிகளை வீழ்த்தி, வெண்கலம் வென்றார். 1,320 ஊசிகளை வீழ்த்திய பிலிப்பீன்சின் மேரி அலெக்சிஸ் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இடையில் பறிபோனது மீண்டும் கைசேர்ந்தது
1 mins read

