வாள்வீச்சு 'எபே' பிரிவில் எல்லி கோ, கிரியா திகானா அப்துல் ரகுமான், ரெபெக்கா ஓங், விக்டோரியா லிம் ஆகியோர் அடங்கிய சிங்கப்பூர் மகளிர் குழு தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது. இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் மகளிர் 45-36 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்து மகளிரை மண்கவ்வச் செய்தனர்.
வாள்வீச்சில் சிங்கப்பூருக்குக் கிட்டிய மூன்றாவது தங்கம் இது.
கடந்த முறை இறுதிப் போட்டியில் பிலிப்பீன்சிடம் கிட்டிய தோல்விக்கும் சிங்கப்பூர் மகளிர் பழிதீர்த்துக்கொண்டனர். இம்முறை புதிய அணியைக் களமிறக்கிய பிலிப்பீன்ஸ் குழு, சிங்கப்பூர்க் குழுவிடம் 32-45 எனத் தோற்றது.
இதனிடையே, சான் ஃபு சியன், சோய் யு யோங், டான் வெய் ஸுவா, ஜோரெல் சீ ஆகியோர் அடங்கிய சிங்கப்பூர் ஆடவர் குழு 'சேபர்' பிரிவு அரையிறுதியில் வியட்னாமிடம் 35-45 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றதால் வெண்கலமே கிடைத்தது.

