சிங்கப்பூரில் காணப்பட்ட வண்ணமிகு மாண்டரின் மீன்கள்

சிங்கப்பூரில் காணப்பட்ட வண்ணமிகு மாண்டரின் மீன்கள்

1 mins read
24b9b556-cb71-4be5-89dd-ef5aeb5e835b
-

வண்­ண­மிகு இரு மாண்­ட­ரின் மீன்­கள் (படம்)

முதன்­மு­றை­யாக சிங்கப்பூரில் காணப்பட்டன. இந்த வகை மீன்களை சிங்கப்பூரில் பார்ப்பது இதுவே முதல் முறை. ஆனால் இவற்றைப் பெரும்பாலும் பிலிப்­பீன்ஸ், இந்­தோ­னீ­சி­யா­வின் போர்­னியோ, ஜாவா தீவு­களில் காணலாம். இந்த மீன்­கள் மீன் காட்­சி­ய­கத்­தில் இருந்து விடு­விக்­கப்­பட்டு

இருக்­க­லாம் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் மீன் அறி­வி­ய­லா­ளர்­கள் கூறினார்கள். செந்­தோ­சா­வில் கடலுக்கு அடியில் நீந்திக்கொண்டு இருந்தபோது இந்த வண்ணமிகு மீன்களைத் தான் பார்த்ததாக மருத்துவமனைப் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் வீனஸ் டான் கூறினார். கடற்கரைக்குச் சென்றால் நீங்களும் இதுபோன்ற அதிசயங்களைக் காணலாம். உடனே அவற்றைத் தொந்தரவு செய்யாமல் படம் எடுத்து வாருங்கள்.

கண்ணைக் கவரும் நீலம், ஆரஞ்சு வண்ணங்களில் விசிறி போன்று துடுப்புகளை விரித்து மாண்டரின் மீன்கள் நீந்திக்கொண்டு இருக்கின்றன.