இந்தியாவின் பிரபல மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், சிங்கப்பூரில் தனது முதல் அதிநவீன மையத்தை அண்மையில் திறந்துள்ளது.
உபி ரோடு 1 தொழிற்பேட்டையில் திறக்கப்பட்டுள்ள இந்தக் கிளையில் இந்நிறுவனத்தின் உயர் ரக மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில், பந்தய ஆர்வலர்
களுக்கான 'டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310', மிகுந்த செயல்
திறனை விரும்புகிறவர்களுக்கான 'டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி' ஆகிய மோட்டார்சைக்கிள் கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
டிவிஎஸ் ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் ரகத்தைச் சார்ந்த 'டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310'ல் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள ப்ளூடூத் வசதியுடன் கூடிய 'ஸ்மார்ட்ஸ்கனெக்ட்' எனும் இருவழித் தொடர்பு வசதி வாகன ஓட்டுநர்களுக்கு ஒவ்வொரு பயணத்தைப் பற்றியும் விரிவான பகுப்பாய்வைத் தருகிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் நகர்ப்புறம், மழை, விளையாட்டு, பந்தயப் பாதை ஆகிய நான்கு விதமான பயணமுறைகள் உள்ளன.
இதன் மூலம் வாகன ஓட்டுநர் கள் தங்களுடைய தேவை மற்றும் வானிலை நிலவரத்திற்கு ஏற்ப வாகனத்தின் செயல்திறனைத் தேர்வு செய்ய முடியும்.
இந்த மோட்டார்சைக்கிள் மூலம் விளையாட்டு, பந்தயப் பாதை பயண முறைகளில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலும் நகர்ப்புறம், மழை பயண முறைகளில் அதிகபட்சமாக மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லமுடியும்.
மேலும் 174 கிலோ எடையுள்ள இந்த மோட்டார்சைக்கிளின் எரிசக்திக்கும் எடைக்குமான விகிதம் சமநிலையில் உள்ளதால், அதிக வேகத்திலும் நிலையான, முழுமையான செயல்திறனை வாகன ஓட்டுநர்கள் உணரமுடியும்.
ரேசிங் ரெட், டைட்டானியம் பிளாக் என இரு நிறங்களில் கிடைக்கும் இந்த மோட்டார்
சைக்கிளின் விலை 9,500 வெள்ளி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பிரீமியம் ரகத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 'டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி' மோட்டார்சைக்கிள், வாகன ஓட்டு நர்களின் பயண அனுபவத்தை விறுவிறுப்பாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் நகர்ப்புறம், விளையாட்டு, மழை என மூன்று விதமான பயணத் தெரிவுகள் உள்ளன. மோட்டார்சைக்கிளின் கைப்பிடியில் உள்ள பொத்தானைப் பயன்படுத்தி பயணத்தின் போதே தெரிவுகளை மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் இந்த மோட்டார்சைக்கிளில் 'ரேஸ் ட்யூன்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன்' தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ள கிளைட் த்ரூ டிராஃபிக் தொழில்நுட்பம் போக்கு வரத்து நெரிசலான சூழலிலும் சுலபமாக பயணம் செய்ய உதவுகிறது.
இதுமட்டுமல்லாமல் இந்த மோட்டார்சைக்கிளில் தேவைக்குத் தக்கவாறு மாற்றிக்கொள்ளக்
கூடிய பிரேக்கும் மூன்று படி மாற்றியமைத்தலுடனான கிளட்ச் லீவர்களும் உள்ளன.
மேலும், இந்த மோட்டார்சைக்கிள் மேம்படுத்தப்பட்ட அதிநவீன 197.75cc சிங்கிள்-சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 4 வால்வு, ஆயில் கூல்ட் எஞ்சின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் எஞ்சின் அதிகபட்சமாக 9000 ஆர்பிஎம்மில் 20.8 பிஎஸ் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதனால், அதிகபட்சமாக மணிக்கு 127 கிலோமீட்டர் வேகத்தில் இதனைச் செலுத்த முடியும். இந்த மோட்டார்சைக்கிளில் உயர் செயல்திறன் கொண்ட ரேடியல் பின்சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக இதிலும் 'ஸ்மார்ட்ஸ்கனெக்ட்' வசதியும் உள்ளது. சிறப்பம்சமாக பயணத்தின்போது ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் 'கிராஷ் அலர்ட் சிஸ்டம்' எனும் வசதி மூலம் 180 வினாடி
களுக்குள் வாகன ஓட்டுநரின் அவசரத் தொடர்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். விபத்து நடைபெற்ற இடத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இத்தொழில்நுட்பம் தெரிவித்துவிடும்.
சிங்கப்பூர் கிளையில் இந்த மோட்டார்சைக்கிள் மேட் ப்ளூ, பேர்ல் ஒயிட், குளோஸ் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இதன் விலை 5,800 வெள்ளி.
மேலும் இக்கிளையில் வாகனப் பராமரிப்புச் சேவை வசதி, உதிரி பாகங்கள் மற்றும் இதர வாகனப் பழுதுநீக்கப் பொருள்களும் உள்ளன. இக்கிளை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு http://tvsmotor.com/en/sg இணையத்தள முகவரியிலும் +65 8819 6198 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

