'இனி எல்லாம் சுகமே!' இன்பப் பேருரை

'இனி எல்லாம் சுகமே!' இன்பப் பேருரை

2 mins read
74721806-9049-40cb-b196-9d9c519a8881
-

இது­வரை பல அற்­பு­த­மான நிகழ்ச்­சி­களை மக்­க­ளி­டம் சேர்த்­துள்ள சங்­கர் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம், தற்­போது கொவிட்-19க்குப் பிறகு, மற்­றொரு சுவா­ர­சி­ய­மான நிகழ்ச்­சி­யைப் படைக்க உள்­ளது.

'இனி எல்­லாம் சுகமே!' என்ற தலைப்­பில் வாழ்க்கை மேம்­பாட்­டுப் பேருரை நிகழ்ச்­சியை சிங்­கப்­பூ­ரில் வழங்க இருக்­கிறது நிறு­வ­னம்.

ஆன்­மீக அறி­வுக்­க­டல் என மக்­கள் போற்­றும் ஸ்ரீஆ­சான்ஜி வரும் வெள்­ளிக்­கி­ழமை (டிசம்­பர் 16) மாலை 6.30 மணிக்கு ஸ்ரீஸ்ரீ­நி­வா­சப் பெரு­மாள் கோவில் வளா­கத்­தில் உள்ள பிஜிபி அரங்­கத்­தில் பேருரை வழங்க உள்­ளார். வருங்­கால வாழ்க்­கையை மேம்­ப­டுத்த இப்­பே­ருரை உத­வும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வாழ்­வில் நல்ல மாற்­றங்­கள் நேர, மாற்­றம் நம்­மி­டம் இருந்து ஆரம்­பம் ஆக வேண்­டும். புத்­தாண்­டுத் தொடக்­கத்­தில், ஒரு­வர் தமக்கு அளித்­துக் கொள்­ளும் முதல் பரிசு வாழ்க்கை மேம்­பா­டாக இருக்க வேண்­டும். இந்த அம்­சம்­தான் ஆண்­டு­தோ­றும் வாழ்க்­கையைச் சுமு­க­மாக தொடர உத­வும்.

வாழ்க்கை மேம்­பட, ஒரு­வ­ரின் ஆளுமை மேம்­பட வேண்­டும். அந்த ஆளுமை மேம்­பாட்­டின் உத்­தி­களை அறிந்துகொள்ள வெள்­ளிக்­கி­ழமை நடக்­கும் பேருரை நிகழ்­வில் கலந்­து­கொள்­ளுங்­கள்.

நமது ஆளு­மையை மேம்­ப­டுத்­து­வ­தன் மூலம், நம் லட்­சி­யங்­களை நோக்கி நாம் வெற்­றி­க­ர­மாக அடி எடுத்து வைக்­க­லாம். வாழ்­வின் இன்­பங்­களைப் பெருக்­க­வும் துன்­பங்­களைக் குறைக்­க­வும் ஆளுமை மேம்­பாடு வழி வகுக்­கும். இளை­யர் முதல் பெரியோர் வரை அனை­வ­ரும் கேட்­டுப் பய­ன­டை­யக்­கூ­டிய இந்­நி­கழ்ச்­சியை ஆத­ர­வா­ளர்­கள் இல­வ­ச­மாக அளிக்க முன்­வந்­துள்­ள­னர். இல­வச நுழை­வுச்­சீட்­டு­களைப் பெற 83532026 எண்ணை அழை­யுங்­கள்.

நிகழ்ச்சி பற்­றிய மேல் விவ­ரங்­க­ளுக்­கும் இந்த எண்ணை தொடர்­பு­கொள்­ள­வும்.

விஜய் டிவி­யின் 'கலக்­கப்­போ­வது யாரு' கலை­ஞர்­கள் படைத்த 'சிரிக்­கப்­போ­குது சிங்­கப்­பூர்', சன் டிவி­யின் பட்­டி­மன்ற நிகழ்ச்சி போன்ற சிங்­கப்­பூர் நிகழ்ச்­சி­க­ளுக்கு ஆத­ர­வா­ளர்­க­ளாக இருந்­துள்­ளது சங்­கர் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம்.

மக்­கள் தற்­போது கண்­டு­க­ளித்து வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்­சி­யின் உள்­ளூர் விநி­யோக ஆத­ர­வா­ள­ரா­க­வும் இருக்­கும் இந்­நி­று­வ­னம், உள்­ளூ­ரில் விரும்­பிப் பார்க்­கப்­படும் வசந்­தம் தொலைக்­காட்­சி­யின் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு விரை­வில் விளம்­ப­ர­தா­ர­ராகச் செயல்­பட உள்­ளது. தொடர்ந்து, நிறு­வ­னத்­தி­டம் இருந்து பல கலா­சார மற்­றும் பொழு­து­போக்கு நிகழ்ச்­சி­களை மக்­கள் எதிர்­பார்க்­க­லாம்.