சைவ அசைவ உணவுக்குப் பெயர்பெற்ற பிரபல 'தி பனானா லீஃப் அப்போலோ' நிறுவனம் 2024ல் அரை நூற்றாண்டைக் கடக்க உள்ளது. தனது 50ஆம் ஆண்டு நிறைவுவிழாவைக் கொண்டாடும் வண்ணம், பல பற்றுச்சீட்டுகளையும் அன்பளிப்பு
களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது இந்த உணவகம்.
'அப்போலோ 11' என்னும் விண்கலத்தில் சென்று நிலவில் மனிதர்கள் கால் பதித்ததைக் கண்டு வியந்த திரு செல்லப்பன் 'அப்போலோ' என்ற பெயரை தன் உணவகத்திற்குச் சூட்டினார். அன்று வானளவு உயர்ந்த 'அப்போலோ'போல தமது உணவகமும் உயரும் என்று திரு செல்லப்பன் கனவு கண்டது இன்று நனவாகி, மக்களின் விருப்பத்தில் இடம்பிடித்து உள்ளது 'தி பனானா லீஃப் அப்போலோ'.
திரு செல்லப்பன் அவர்களின் உழைப்பால் உயர்ந்து, மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள இந்த உணவகம், தனது பொன்விழாக் கொண்டாட்டத்தில் வாடிக்கை
யாளர்களை இணைக்க விரும்பு கிறது. அதனால் அடுத்த ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு பல சுவாரசியமான நிகழ்வுகளை நடத்த அது திட்டமிட்டுள்ளது.
லிட்டில் இந்தியா ஆர்க்கேட்டில் இயங்கி வந்த 'தி பனானா லீஃப் அப்போலோ' உணவகம், மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 'அப்போலோ'ஸ் ஃபுட் வில்லேஜ்' என்ற புதிய பெயருடன் ஜனவரி மாதம் புதுப் பொலிவுடன் தொடங்க உள்ளது.
இதைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் பொன்விழாக் கொண்டாட்டங்களை மாபெரும் விழாக்
களாக வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து கொண்டாடவிருக்கிறது இந்த உணவகம்.
உணவால் உவகை அளிப்பதை இலக்காகக் கொண்ட 'தி பனானா லீஃப் அப்போலோ'வை தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சி களில் திரு சங்கரநாதன் ஈடு பட்டு வருகிறார். இந்த இலக்கை பூர்த்தி செய்து வருவதற்குச் சான்றாக உணவுப் பிரியர்களை மகிழ்விக்கும் கொண்டாட்டங்களும் கூடிய விரைவில் இடம் பெற உள்ளன.
உள்ளூர் மக்களும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் புடைசூழ விரும்பிவந்து சாப்பிடக்கூடிய 'தி பனானா லீஃப் அப்போலோ' உணவகம், தற்போது ரேஸ் கோர்ஸ் சாலை, லிட்டில் இந்தியா ஆர்க்கேட், டவுன்டௌன் ஈஸ்ட், சிக்ஸ்த் அவென்யூ, ரிவர்வேல் மால் ஆகிய ஐந்து இடங்களில் கிளை பரப்பி தீவு முழுவதும் உணவுப்பிரியர்களை ஈர்த்து வருகிறது.

