'மெகா இந்தியா எக்ஸ்போ' கண்காட்சி

'மெகா இந்தியா எக்ஸ்போ' கண்காட்சி

3 mins read
fc25ac64-fa1c-461f-ad88-86a902022cbe
-

'லவ் டுடே' நாயகன், நாயகியை நேரில் காணலாம்

ஆடை ஆப­ர­ணம், அறை­க­லன், வீட்டு உப­யோ­கப் பொருள்­கள் என புத்­தாண்டை வர­வேற்­கத்

தேவை­யான எல்­லாப் பொருள் களை­யும் ஒருங்கே வழங்க இருக்­கின்­றது, ஷாபாஸ் நிறு­வ­னத்­தின் 'மெகா இந்­தியா எக்ஸ்போ' கண்­காட்சி. 2023 புத்­தாண்­டை­யும் பொங்­கல் திரு­நா­ளை­யும் முன்­னிட்டு ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரும் இந்­தக் கண்­காட்சி ஜன­வரி 5ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை சிங்­கப்­பூர் எக்ஸ்போ கண்­காட்சி அரங்­கு­களில் ஒவ்­வொரு நாளும் காலை 10 மணி­யி­லி­ருந்து இரவு 10 மணி வரை நடை­பெ­றும்.

ஹைத­ரா­பாத், புது­டெல்லி, ஜெய்ப்­பூர் என பல இந்­திய நக­ரங்களில் இயங்­கி­வ­ரும் 100 வணிக நிறுவனங்களுடன் உள்­ளூ­ரில் செயல்­படும் 50 நிறுவனங்­

க­ளை­யும் சேர்த்து மொத்­தம் 150 நிறுவனங்­கள் 'மெகா இந்­தியா எக்ஸ்போ கண்­காட்சி'யில் கலந்து­ கொண்டு தத்­தம் பொருள்­க­ளை­யும் சேவை­க­ளை­யும் அறி­மு­கப்­

ப­டுத்த இருக்­கின்­றன.

புது வர­வு­கள், வடி­வ­மைப்­பு­கள், சலு­கை­கள் என மக்­க­ளைக் கவ­ரும் பல சிறப்­பம்­சங்­களை மெகா இந்­தியா எக்ஸ்போ கண்­காட்சி ஒருங்­கி­ணைக்­க­வுள்­ளது.

அவற்­று­டன், சொத்து நிறு வனங்­கள், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள், கல்­வி­சார் நிறு­வ­னங்­கள், நேரடி உணவு அங்­கா­டி­கள் ஆகி­ய­ன­வும் இந்­தக் கண்­காட்­சி­யில் இடம்­பெ­றும்.

நான்கு நாள்­கள் தொடர்ந்து மக்­களை மகிழ்­விக்­கும் பல்­வேறு கேளிக்கை நிகழ்ச்­சி­க­ளை­யும் ஏற்­பாடு செய்­துள்­ளது ஷாபாஸ்.

ஜன­வரி 5ஆம் தேதி, பிர­பல தமிழ்த் திரைப்­ப­ட­மான 'லவ் டுடே' யின் நாயகன் பிர­தீப் ரங்­க­நா­தன், நாயகி இவானா ஆகி­யோரை நேர­டி­யாகச் சந்­திக்­கும் வாய்ப்பை கண்­காட்­சிக்கு வரு­வோர் பெற­லாம்.

தொடர்ந்து அடுத்­த­டுத்த நாள்­களில், உள்­ளூர் கலை­ஞர்­கள், பள்ளி மாண­வர்­கள் படைக்­கும் கலை­நி­கழ்ச்­சி­களும் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன.

மக்­களை கூடு­த­லாக ஈடு­

ப­டுத்­தும் வகை­யில், சிங்­கப்­பூர் இந்­தி­யர்­களை அங்­கீ­க­ரிக்­கும் விருது அங்­கத்­திற்­கும் ஷாபாஸ் ஏற்­பாடு செய்­துள்­ளது. 2000ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட ஷாபாஸ் நிறு­வ­னம் பல­த­ரப்­பட்ட மக்­க­ளுக்­கும் பயன்­படும் பல நிகழ்­வு­களை முன்­னெ­டுத்து நடத்தி வரு­கிறது.

தனது 22 ஆண்­டு­கால செயல்­பாட்­டில் முதல் முயற்­சி­யாக அமைந்­துள்ள இவ்­வாண்­டின் மெகா இந்­தியா எக்ஸ்போ, இந்­நி­று­வ­னத்­தின் வளர்ச்­சி­யில் ஒரு முக்­கிய மைல்­கல் என்­கி­றார் நிறு­வ­னத்­தின் நிர்­வாக அதி­காரி திரு அப்­துல் மாலிக் அப்­துல் சலாம், 42.

"உள்­ளூர், வெளி­யூர் வணி­க நிறுவனங்­க­ளுக்கு இடையே இணைப்பு ஏற்­ப­ட­வும் உள்­ளூர் வணி­கங்­கள் தங்­க­ளது வியா­பா­ரத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கும் நல்ல தள­மா­க­வும் ஊக்­க­மா­க­வும் இந்­தக் கண்­காட்சி அமை­யும் என நம்­பு­கி­றோம். இது­போன்ற பல கண்­காட்­சி­களை முன்­னெ­டுத்து நடத்­தி­யுள்ள ஷாபாஸ், இம்­முறை ஓர் ஏற்­பாட்­டா­ள­ராக பரி­மா­ணம் காண்­கிறது. கண்­காட்­சி­யைக் காண வரு­வோர் தர­மான சேவை­க­ளை­யும் பொருள்­க­ளை­யும் எதிர்­பார்க்­க­லாம். எங்­க­ளது படைப்­பு­க­ளுக்கு மக்­க­ளின் ஆத­ரவு தொடர்ந்து நீடிக்­கும் என எதிர்­பார்க்­கி­றோம்," என்­றார் திரு அப்­துல் மாலிக்.

குறிப்­பாக, சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளின் தேவை­க­ளுக்­கும் விருப்­பங்­க­ளுக்­கும் ஏற்ற பொருள்­க­ளை­யும் சேவை­க­ளை­யும் வழங்­கும் இந்­திய வணி­க நிறுவனங்­களை இக்­கண்­காட்­சிக்­காகத் தேர்ந்­தெ­டுத்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

'மெகா இந்­தியா எக்ஸ்போ' கண்­காட்­சியை வரும் ஆண்­டு­களில் ஆண்­டு­தோ­றும் மூன்று முறை ஏற்­பாடு செய்ய திட்­டம் வைத்­துள்­ளது ஷாபாஸ் நிறு­வ­னம். அதோடு, இவ்­வாண்டு ஜூன் மாதத்­தி­லும் தீபா­வளி கொண்­டாட்ட வேளை­யி­லும் மெகா இந்­தியா எக்ஸ்­போ­வின் பதிப்­பு­கள் இடம்­பெ­றும் என்­றும் அதற்­கான ஏற்­பா­டு­கள் நடந்­து­வரு­வ­தா­க­வும் திரு அப்­துல் மாலிக் குறிப்­பிட்­டார். ஒவ்­வொரு காண்­காட்­சிப் பதிப்­பி­லும் புதுப்புது வணி­கங்­கள், புதிய பொருள்­கள், சேவை­கள் இணைக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.