சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் பணியாற்றிய முன்னாள் தேசிய சேவை வீரரான திரு சிராஜ்தீன், அவரது தேசிய சேவை பணி முடிந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டதை அவர் இன்னும் நினைவில் வைத்துள்ளார். அவரது தனிப்பட்ட அனுபவத்தில், வேலைக்குத் தகுந்த இருவருக்கு இடையில் தேசிய சேவையாற்றச் சென்ற ஒருவருக்கும் அவ்வாறு செய்யாத ஒருவருக்கும் இடையில் வேறுபாடு உள்ளது.
தினமும் பலரின் வாழ்க்கை தமது கையில் இருக்கும் நிலையில், அதிமுக்கிய சிந்தனை ஆற்றல், பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல், தலைமைத்துவம் போன்ற திறன்கள் தேசிய சேவையை புரிந்த ஒருவருக்குள் பதிந்துவிடும்.
இத்தகைய திறன்களை முத
லாளிகள் அங்கீகரித்தால், அவை பணியிடத்தில் பயனளிக்கும் என்பதையும் கூறினார் முன்னாள் தேசிய சேவை வீரர்.
ராயல் கிங்ஸ் குரூப்ஸ் நிறுவனம் தேசிய சேவை புரிந்தவர்களின் சான்றிதழ்களையும் அவர்களின் உயர் அதிகாரிகளின் வாக்குமூலங்களையும் பணியமர்தல் செயல்முறையின் போது கருத்தில் கொள்ளப்படும். வேலை நேர்முகத் தேர்வின்போது அவர்களின் தேசிய சேவை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்படு
கிறார்கள்.
முழுநேர தேசிய சேவையில் செலவழித்த நேரம், நிறுவனத்தில் வேலை செய்ததாக கணக்கிடப்படுகிறது. எனவே ராயல் கிங்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு புதிய தேசிய சேவை வீரரும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அந்நிறுவனத்தில் வேலை செய்ததாக கருதப்படும்.
திரு சிராஜ்தீனைப் பொறுத்தவரை, தேசிய சேவை ஆற்றுவது இந்த நிறுவனத்திற்கு அவர்கள் ஆற்றும் ஒரு பங்கு.
"சிங்கப்பூர் மிகவும் துடிப்பான, வெற்றிகரமான நிதிநிலைக்குரிய மையமாக உள்ளது. அதற்குக் காரணம், சிங்கப்பூர் பாதுகாப்பான நாடாக கருதப்படுகிறது" என்று திரு சிராஜ்தீன் கூறுகிறார்.
"சிங்கப்பூர் வணிகத்திற்கு உகந்த சூழல் கொண்டது. இதனால், மக்கள் தங்கள் முதலீடுகள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். தேசிய சேவை வீரர்கள் நம் நாட்டின் பாதுகாப்புக்கும் தற்காப்புக்கும் பெரிய பங்கை அளித்திருக்கின்றனர். அவர்களின் பங்கை ஆற்றியதோடு தொடர்ந்து சேவை செய்வார்கள்.
"எனவே அவர்களின் பங்களிப்புகளை மிக உயர்ந்த முறையில் நாம் அங்கீகரிப்பதுடன், அவர்களின் தேசிய சேவை கடமைகளை மதித்து அவர்களை ஊக்குவிப்பதும் சரியானது" என்றும் திரு சிராஜ்தீன் குறிப்பிட்டார். ஒரு முன்னாள் முதலாளி
யிடம் இந்த மனப்போக்கை அவர் கற்றுக்கொண்டார். அந்த முதலாளி, திரு சிராஜ்தீன் உட்பட மற்ற தேசிய சேவை வீரர்களை அணுகி தமது ஆதரவை வழங்கினார்.
இதைப் பார்த்து ஊக்கமடைந்த அவர், தனது சொந்தத் தொழிலைத் தொடங்கியவுடன் அதைப்போல செய்ய வேண்டும் என்று உறுதியளித்தார் திரு சிராஜ்தீன். இதனால், செயல்பாட்டுக்குத் தயாராக உள்ள ஊழியர்களின் நலனில் எந்தச் செலவும் மிச்சப்படுத்தப்படவில்லை. ஒவ்வோர் ஊழியரும் சாஃப்ரா, ஹோம் டீம் அல்லது சிவில் சர்வீஸ் சங்கத்தில் உறுப்பினர்களாக இலவசமாக சேரமுடியும். நிறுவனத்தின் செலவில், ஊழியர்களால் அவர்களின் குடும்பங்களோடு இந்த இடங்களில் நேரம் செலவழிக்க முடிகிறது.
தனிநபர் உடலுறுதிச் சோதனையில் நன்றாகத் தேர்ச்சி பெறுவோருக்கு $500 வரை என்டியுசி பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ராயல் கிங்ஸ் குரூப் அதன் 10வது ஆண்டு விழாவுக்காக, நிறுவனத்தில் வேலை செய்த ஒவ்வொரு தேசிய சேவை வீரருக்கும் தலா $100 பற்றுச்சீட்டுகளை வழங்கியது.