ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க திரு சிராஜ்தீன் ஐசிடி முகாம் பயிற்சியில் முடிந்தவரை தடையின்றி அவர்கள் கலந்துகொள்ள உறுதிசெய்கிறார்.
ராயல் கிங்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாடு, ஐசிடி முகாமுக்கு செல்லும் அதன் ஒவ்வொரு ஊழியர்களின் சார்பாகவும் 'மேக் அப் பே' என்ற ஊதியத் திட்டத்தை பெற கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஐசிடி முகாமுக்கு செல்லும் அல்லது திரும்பி வரும் ஊழியர்களுக்கு அவர்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட கூடுதல் விடுப்பு நாள்கள் வழங்குகிறது.
தேசிய சேவையை ஆதரிக்கும் வகையில் இருக்கும் இந்நிறுவனம், இதனால் பல நன்மைகளை பெற்றுள்ளது.
ராயல் கிங்ஸ் குரூப்ஸ் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களில் 20 விழுக்காட்டினர் தேசிய சேவை வீரர்கள். அதில் ஒருவர்கூட கடந்த மூன்று ஆண்டுகளில் தங்களின் ஐசிடி முகாம் பயிற்சியை ஒத்திவைக்கவில்லை.
திரு சிராஜ்தீனின் இந்தத் திட்டம், அவரின் ஊழியர்
களுக்கும் அவரின் தொழிலுக்கும் உதவியுள்ளது. இந்த உத்திகளால் ராயல் கிங்ஸ் குரூப் சிங்கப்பூர் நிறுவன ஊழியர்களின் புரள்வு விழுக்காடு குறைவாக உள்ளது.
"மேலும், என்எஸ் மார்க் அங்கீகாரம் பெற்ற மற்ற நிறுவனங்களுடன் ராயல் கிங்ஸ் குரூப்ஸ் ஒரு நல்ல உறவை வளர்த்து வருகிறது. மக்கள் தேசிய சேவை புரிபவர்களுக்கு ஆதரவு தரும் நிறுவனங்களிடம் வாங்க அதிக விருப்பத்துடன் உள்ளனர்," என்று திரு சிராஜ்தீன் கூறுகிறார்.
ஆனால், என்எஸ் மார்க் (கோல்ட்) அங்கீகாரம் பெற்றிருப்பது பெருமைக்குரியதாக இருந்தாலும், அது நிறுவனத்தை மேம்படுத்த உதவியுள்ளது என்பதையும் திரு சிராஜ்தீன் வலியுறுத்துகிறார். தேசிய சேவைக்கு ஆதரவான கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
"ஒவ்வொரு நிறுவனமும் நமது நாட்டுக்காக சமூகப் பொறுப்பின் அடிப்படையில் இத்திட்டங்களை நடைமுறைப் படுத்த வேண்டும்," என்றும் திரு சிராஜ்தீன் கூறினார்.

