பல்மருந்தகம் ஒன்றில் பகுதிநேர உதவியாளராக இருக்கும் நான், 2023ல் இத்துறை சார்ந்த வேலைப்பயிற்சிகளில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு பல்கலைக்கழகப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பேன். சிங்கப்பூர் தமிழ் மன்றத்தின் இளையர் பிரிவு உறுப்பினராக, வெளிநாட்டு ஊழியர்களுக்காக மன்றம் ஏற்பாடு செய்யும் நன்கொடைத் திட்டத்துக்குத் தொடர்ந்து உதவ விரும்புவதுடன் சமுதாயத்திற்குச் சேவையாற்றுவேன்.
செந்தில்குமார் பூர்விகா, 18
'ஏ' நிலைத் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவி

