விழிப்புணர்வு இயக்கம் மோசடிக்கு எதிராக செயல்படுக

விழிப்புணர்வு இயக்கம் மோசடிக்கு எதிராக செயல்படுக

2 mins read
6fe02c63-2f3f-4f68-98c8-8a37f6c7f387
-

மோச­டி­க­ளுக்கு எதி­ராக சிங்­கப்­பூர் மக்­கள் தீவி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று உள்­துறை துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

எவ­ரும் மோச­டிக்கு இரை­யா­க­லாம். அதன் விளை­வு­கள் மோச­மாக இருக்­கும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

"மோச­டி­கள் உல­கம் எங்­கும் உள்ள அனைத்து சட்ட, அம­லாக்க நிறு­வ­னங்­க­ளுக்­கும் பெரும் சவா­லாக உள்­ளன.

"எனவே, சட்ட நடை­மு­றை­களை மட்­டுமே நம்­பி­யி­ருக்க முடி­யாது. மோச­டி­க­ளுக்கு எதி­ரான சிறந்த தற்­காப்பு, விழிப்­பு­டன், கவ­னத்­து­டன், விவே­கத்­து­டன் இருப்­பது. அதில் நம்­மைப் பாது­காத்­துக் கொள்­வ­தோடு, மோச­டி­களில் இருந்து மற்­ற­வர்­க­ளை­யும் பாது­காப்­பது," என்­றார் அமைச்­சர். மோச­டிக் குற்ற எதிர்ப்­பில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த சன்­டெக் மாநாட்டு மண்­ட­பத்­தில் நேற்று முன்­தி­னம் நடந்த 'ஸ்கே­மி­னார்' கருத்­த­ரங்­கில் அவர் பேசி­னார்.

அமைச்­சு­க­ளுக்கு இடை­யி­லான மோச­டித் தடுப்­புக் குழு­வுக்­குத் தலைமை தாங்­கும் அவர், நேர­டி­யாக நடை­பெ­றும் குற்­றங்­கள் குறை­வாக இருக்­கும் நிலை­யில், இணைய மோச­டி­கள் தான் தற்­போ­தைய தலை­யாய பிரச்­சினை என்றார்.

உள்­துறை அமைச்சு, சிங்­கப்­பூர் காவல்­துறை, தேசிய குற்­ற­வி­யல் தடுப்பு மன்­றம் ஆகி­யன 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்தாளு­டன் இணைந்து நடத்­திய இக்­க­ருத்­த­ரங்­கில் 700க்கும் மேற்­பட்டோர் நேர­டி­யா­க­வும் 200க்கும் மேற்­பட்­டோர் இணை­யம் வாயி­லா­க­வும் பங்கேற்றனர்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­ச­ரு­மான அவர், 2017 முதல் 2021 வரை நடை­பெற்ற 60,000 இணைய மோச­டிச் சம்­ப­வங்­களில் ஒரு பில்­லி­யன் வெள்­ளிக்­கும் மேற்­பட்ட தொகையை சிங்­கப்­பூர் மக்­கள் இழந்­துள்­ள­தா­க­வும் அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் குறிப்­பிட்­டார்.

உல­க­ள­வில் நில­வும் சிர­ம­மான பொரு­ளி­யல் சூழ்­நி­லை­யில், மோச­டி­கள் அதி­கரிக்­க­லாம். வேலை மோசடிகள் கவலைக்குரியன என்றார் அவர்.

சில பிரிவினரே மோசடிகளுக்கு இலக்காக இருப்பார்கள் என சிலர் நினைக்கலாம். மூத்த குடிமக்கள்தான் மோசடிகளுக்கு இரையாகிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. எவரும் மோசடிக்கு ஆளாகலாம் என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மோசடிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம், நிதி இழப்புகளுக்கு அப்பால் அவர்களைப் பாதிக்கலாம்.

உள்­துறை துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங்

மோசடித் தடுப்பு நேரடி எண்

1800-722-6688

மனநலக் கழக உதவி எண்

6389-2222

சிங்கப்பூர் அபய ஆலோசனை சங்கம் 1-767

மனநலத்துக்கான சிங்கப்பூர் சங்கம் 1800-283-7019

சில்வர் ரிப்பன் சிங்கப்பூர்

6386-1928

டிங்கிள் ஃபிரண்ட் (7-12 வயது) 1800-2744-788

டச்லைன் (ஆலோசனை)

1800-377-2252

மோசடிக் குற்றத்துக்கு எதிரான வளங்களைப் பெற:

scamalert.sg

scamshield.org.sg